ஷேக்ஸ்பியரின் மேக்பத் என்னும் அவலச்சுவைமிக்க நாடகத்தில், மேக்பத் புலம்புவதாக ஒரு வசனம் வரும். அந்த வசனம் 'Life is nothing but a tale told by an idiot, full of sound and fury signifying nothing'. (வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவன் எழுதிய கதை; அது இரைச்சலிட்டுக் கத்தும் அர்த்தமில்லாத ஓசை போன்று; எந்தவித அர்த்தமுமின்றி இருக்கிறது என்பதுதான்.) ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விமரிசித்தால் கிடைக்கும் விடையானது, ஷேக்ஸ்பியர் மேக்பத் என்னும் நாடகத்தில் கூறிய வசனத்தைப் போல்தான் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற விமரிசகர்களின் விமரிசனங்களைப் படித்திருக்கிறேன். அதன் அடிப்படையிலேயே, 54 பேரின் வாழ்க்கை வரலாற்றை முடிந்தவரை எழுத முயற்சித்தேன்.
இந்தப் புத்தகத்தில் உள்ள ஏதாவது ஒரு செய்தி, இதைப் படிக்கின்றவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஓர் நிகழ்ச்சிக்கு ஒரு உந்து சக்தியாகப் பயன்பட்டால், அதுவே நான் அடைகின்ற மகிழ்ச்சியாகும்.
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். கன்னிப்பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை , ஆலய தீபம், சிறை, மக்கள் என் பக்கம், நிலவே மலரே, மகாநதி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
சிறந்த உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்துள்ள இந்த நூல் தமிழ் சினிமாவில் சாதனை புரியும் எண்ணம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் ஊட்டக்கூடியது.
Rent Now