Home / eBooks / Naalai Meethi
Naalai Meethi eBook Online

Naalai Meethi (நாளை மீதி)

About Naalai Meethi :

பானுசந்தரின் மனைவி ஐஸ்வர்யா. சற்று தாமதமான திருமணம். காரணம் புரியாத வெறுப்பு. அதனால் வாழ்க்கையில் விரிசல். ஒரு கணவனுக்குத் தர வேண்டிய நியாயமான சந்தோஷத்தைக்கூட தராமல் எந்திர வாழ்க்கை நடத்தி இரண்டு பிள்ளைகளைப் பெறுகிறாள். புத்தகங்கள், படங்கள் மூலம் செயற்கை சந்தோஷம் பெறும் பரிதாபத்துக்குரிய பானுசந்தரை இனம் காண்கிறாள் இளம் பெண் கீர்த்தனா. அதுவே அவனிடம் அவளுக்கொரு ஈடுபாட்டை உண்டாக்க, ஈடுபாடு காதலாகி, அவனுக்கே தன்னைத் தர முடிவு செய்கிறாள். கீர்த்தனாவைப் பெற்றவர்கள் வருண் எனும் இளைஞனுக்கு அவளைப் பேச முயல, மறுத்து விடுகிறாள்.

ஒரு பார்வையில் அவளைப் பிடித்துவிட்ட வருண், பானுசந்தரின் மேல் அவள் கொண்டுள்ள ஈடுபாடு தவறு என்கிறான். கீர்த்தனா பானுவிடம் ஒரு இரவில் தன்னையே வழங்கி விடுகிறாள்.

விவகாரம் கல்யாணம் வரை போக,

முதல் மனைவி இருக்க, அந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது என எண்ணி வருண் யாரையோ ஏவி விட, ஊரிலிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு விவரம் போக, அவர்கள் புறப்பட்டு கோயில் அடைந்துவிட, பானுசந்தரின் தாலி கீர்த்தனாவின் கழுத்தில் ஏறிவிடுகிறது. தம்பிகள் அதைப் பறித்து எறிந்து விடவும் தயாராயிருக்க, அருகில் நெருங்கும் ஐஸ்வர்யா அவர்களை வாழ்த்திவிட்டு, 'ஒரே வீட்டில்தானே வாழ வருகிறாய். பார்த்துக் கொள்கிறேன்' என்று சவால் விடுகிறாள். சவாலை கீர்த்தனா எப்படி ஏற்றுக் கொள்கிறாள் என்பதன் ஆரம்பம் இனி...

About Devibala :

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Rent Now
Write A Review

Same Author Books