மணிப்பிரவாளத்தைத் தவிர்த்த நடையில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாவல் வடிவில் முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். அத்துடன் துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வை தம் என்ற மூன்றையும் எல்லோ ருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். ஸார்வாகம், ஜைனம், பவுத்தம், வேதங்கள், உபநிஷத்துகள், யாகங்கள் பற்றிய விளக்கங் களும் பொருத்தமாகவும் அள வோடும் இருக்கின்றன. வைண வத்தைப் பற்றிச் சொல்ல வேண் டியவனவற்றைத் திட்டமிட்டு, ‘சூடிக்கொடுத்த நாச்சியாரை’ப் போலவே வண்ணமயமாகத் தொடுத்துக் கொடுத்திருக்கிறார். வேற்றுமைகளை விதைக்கும் ‘கலை’ தெரிந்தவர்களைப் பற்றிய வேதனையையும் நூல் எதிரொலிக்கிறது.
வைணவர்கள் அறிந்திருக்க வேண்டிய 3 ரகசியங்கள் (ரஹஸ்யத்ரயம்) 1. திருமந்திரம், 2, துவயம், 3. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற சுலோகத்தின் பொருள். பஞ்ச சம்ஸ் காரம் என்பது சமாஸ்ரயணம், புண்ட்ரம், நாமம், மந்திரம், யோகம் என்ற ஐந்து. வரிசைக்கிரமமாக இவை விளக்கப் பட்டுள்ளன. நமது உடல் நமது உயிரின் (ஆன்மாவின்) வீடு; நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு; எனவே பிரும்மமும் உண்மை, உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதை வைணவம் தத்வத் தரயம் என்கிறது. இதில் மாயை என்பதற்கு இடமில்லை.
வைணவ சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவையில்லை. அந்தணராக இருக்க வேண்டாம். நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம். ஏழை செல்வந்தன் வேறுபாடு இல்லை. பழைய குல அடையாளங்கள் மறைய வேண்டும். பானை செய்பவரும் வேதம் ஓதுபவரும் சிறுவினைஞர்களும் ஒன்றே என்பதுதான் வைணவம் என்று இந்த நூலில் வெகு அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில் வெளியாகியிருக்கும் இந்த நூல் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நித்யானுசந்தானம் என்றால் மிகையில்லை.
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்த ஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் வங்கித்துறையில் மென்பொருள் கட்டமைப்பாளராகப் பணியாற்றுகிறார். 'ஆ.. பக்கங்கள்' (www.amaruvi.in) என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களிலும் தமிழகக் கோவில் வரலாறுகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ள ஆமருவி, 'பழைய கணக்கு' என்னும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பும், 'Monday is not Tuesday' என்னும் ஆங்கில மின் நூலும் வெளியிட்டுள்ளார். 'பழைய கணக்கு' தொகுப்பில் வந்த 'ஸார் வீட்டுக்குப் போகணும்' சிறுகதை இந்திய மனிதவள அமைச்சின் தேசிய புத்தக நிறுவனத்தின் 'சிறந்த 25 சிறுகதைகள்' வரிசையில் இடம்பெற்றது. 'நான் இராமானுசன்' இவரது மூன்றாவது நூல்.
Rent Now V.R.SOUNDER RAJAN
IT IS A SYNTHESIS OF VISHITADHVADHA அறிவுக்கும் அறியாமைக்கு நடக்கும் போரில் அறிவே பரிசு அறியாமையே தண்டனைதான் உறங்காவல்லி பொன்னாச்சி இடமிருந்து தொடங்கி அவர்களிடமே முடித்த பாங்கு, உடையவரின் எண்ண ஓட்டத்தின் சிறப்பை சீர்தூக்கியது . மனித மனங்கள் இருக்கும்வரை வாதங்கள் தொடரும் நம்மாழ்வாரின் அவரவர் நிலை வள்ளலாரின் குறியீடு புத்தனை முறியடித்த (ஆதி)சங்கரரின் அனைத்தும் பிரம்மம் கூரத்தாழ்வானின் வைட்டணவ இலக்கணம் பண்டைத்தமிழனின் நெல்லிக்கனி மயிலுக்குப் போர்வை முல்லைக்குத்தேர் தொடரும் தொல்காப்பியம்
V.R.SOUNDER RAJAN

m giridharan
super