“பெண்” என்பவளுக்கான வரையறை சொல்லி வளர்க்கப்பட்ட கதையின் நாயகி வைதேகி, சராசரி குடும்பத் தலைவி. அவளது மகள் பதினைந்தே வயதான வெண்ணிலா இக்காலச் சிந்தனை கொண்டு வாழ்பவள்.
சூழ்நிலை நிகழ்வாக, வெண்ணிலா சி. பி. ஐ அதிகாரிகள் வலையில் சிக்க, அப்பொழுது “நான் ஏன் பெண்ணானேன்” என்று வீட்டினுள் ஒடுங்கிய வைதேகி, மகளுக்காகத் தன் கூட்டைத் தாண்டுகிறாள். பின் சுயமரியாதை காரணமாக வீட்டையும் தாண்டி, “ ஏனென்றால் நான் பெண். என்னால் முடியும்” என்று மகளைத் தனியாக வளர்த்து காட்டுகிறாள்.
சுருங்க சொன்னால், “நான் ஏன் பெண்ணானேன்” என்று கதறும் பெண்,
“என்னால் முடியும். ஏனென்றால் நான் பெண்” என்பதை எடுத்துக்காட்டும் காட்டும் கதை.
இக்கதையோடு பயணிக்க இருப்பவர்களுக்கு நன்றி. மேலும் உங்களது விமர்சனங்களை srishaofficial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.
Budding Tamil Novel writer. Wish to write story in all genres.
Rent Now