Home / eBooks / Naan Yen?
Naan Yen? eBook Online

Naan Yen? (நான் ஏன்?)

About Naan Yen? :

தயக்கம், கூச்சம், தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் இவையே ஒவ்வொரு மனிதனின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாக இருக்கிறது. இத்தகைய குணங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகின்றன. பாதிப்பு ஏற்படுத்தும் குணங்களை தவிர்ப்பது எப்படி? பயன்தரும் குணங்களை வளர்ப்பது எப்படி? என்று வழிகாட்டும் நூலேநான் ஏன்?

தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத அற்புத எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் கைவண்ணத்தில் மேலைநாட்டுக் கருத்துக்களும் நமது மண்ணின் தன்மையோடு வெளிப்படுகின்றன. ஆண் - பெண் என்ற பேதமில்லை, இளமையா - முதுமையா என்ற வயது வித்தியாசமில்லை, காரில் வருபவரா - காரை ஓட்டுபவரா என்ற பொருளாதார பேதமில்லை. யாராக இருந்தாலும் அவர்களின் சந்தேகங்களுக்குபேராசிரியர்அளிக்கும் பதில்கள் எல்லோருக்கும் திருப்தி தரக்கூடியவை.

தன்னம்பிக்கை நூல்கள் பல தமிழில் வெளிவந்துள்ளன என்றாலும் இது அவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது. வெறும் போதனையாக இல்லாமல், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சம்பவங்களை விளக்கி, சுவாரஸ்யமான நடையில், சந்தேகங்களுக்கு தீர்வளித்து, ஒவ்வொரு அத்தியாயத்தை படித்து முடிக்கும்போதும் உள்ளத்திற்கு ஒரு டோஸ் வைட்டமின் கிடைத்தது போன்ற புத்துணர்வை ஏற்படுத்தக் கூடியவை.

ரா.கி. ரங்கராஜன் தந்திருக்கும் இந்த தன்னம்பிக்கை வைட்டமின் வார்த்தைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பலவீனங்களை களைந்து, பலத்தைப் பெருக்கி வாழ்க்கையில் வெற்றியடைய எளிய வழி கிடைக்கும். வெற்றி பெற நினைப்பவர்கள் தவிர்க்க முடியாத புத்தகம் இது.

About Ra. Ki. Rangarajan :

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Rent Now
Write A Review

Same Author Books