Home / eBooks / Naattai Meetta Vattam
Naattai Meetta Vattam eBook Online

Naattai Meetta Vattam (நாட்டை மீட்ட வட்டம்)

About Naattai Meetta Vattam :

கதைகள் வழியாக வாழ்வியலையும் அறிவியலையும் கற்ற சமூகம் நமது தமிழ் சமூகம். கதை வழியாக ஒரு கருத்தினை நாம் அறிய முற்படும் போது நமது மனமானது நம்மை அறியாமலேயே கற்க ஆரமித்து விடுகிறது. கணிதம் என்னும் கற்கண்டினை கதை வழியாக சுவைப்பது என்பது சுவாரசியமானது. இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கணிதத்திலுள்ள வடிவமான வட்டத்தில் அமைந்துள்ள பாகங்களின் பெயரை தாங்கி வருகின்றது.

ஒருநாட்டில் போர்மேகம் சூழ்கின்றது. அந்நாட்டின் அரசர் முக்கியமான படைவீரர்களுடன் பிரச்சனையை சமாளிப்பது பற்றி பலசுற்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். ஒவ்வொரு சுற்றிலும் பேச்சுவார்த்தை நடக்கும் மேசையின் வடிவங்கள் சதுரம், செவ்வகம், இணைகரம், என பலவகையான வடிவங்களில் மாற்றி அமைக்கப்படுகின்றது. இறுதியாக வட்டவடிவை அடையும் போது பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படுகிறது. ஒவ்வொரு வடிவங்கள் வழியாக மேசைகள் அமைக்கப்படும் போது நம்ம அந்த வடிவத்தின் பண்புகளை கற்கிறோம்.

கற்க ஆரம்பிக்கலாமா?

About Dr. R. Prabakaran :

முனைவர். ரா. பிரபாகரன் அவர்கள் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப்பேராசிரியராகவும் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராகவும்பணிபுரிந்து வருகிறார். கணிதத்தினை கதைகள் முலம் நடத்துவதில் வல்லவர். பொறியியல் கணிதம் கற்பித்தலில் புதுமைகள் புகுத்துவதில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்கவர் . அறிவியல் தமிழில் ஆர்வம் மிக்கவர் சிறந்த இந்தியன் விருது, மனிதா நேயமாமணி விருது, சுவாமி விவேகானந்தர் விருது, கவி தென்றல் என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து நிதியுதவி பெற்று கணிதவியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார்.

பண்டைய தமிழர்களின் கணித திறன்கள், இந்தியர்களின் புராணங்களில் புதைத்துள்ள கணித புதையல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books