Home / eBooks / Neduvazhi
Neduvazhi eBook Online

Neduvazhi (நெடுவாழி)

About Neduvazhi :

ஒரு காதல் என்றால் இப்படித்தான் உருவாகியிருக்கும் என்ற கற்பனையை மனதில் நிறுத்தி காதலன் தன் காதலியின் மீது காதல் வயப்படும் பொழுது தன் காதலியை நினைத்து தன்னைத் தானே தொலைத்து எப்படியெல்லாம் தன் காதலை வெளிப்படுத்த துடிப்பானோ அப்படியே அதை வரிகளாய் பிரசவித்து இருக்கிறேன்.

எப்படியெல்லாம் தன் காதலியை உயர்வாக சித்தரிக்க நினைப்பானோ, எப்படியெல்லாம் தன் காதலியுடன் வாழவேண்டும் என்ற ஆசை கொள்வானோ அப்படியெல்லாம் உருக் கொடுத்திருக்கிறேன்.

ஒரு பெண்ணைப் பற்றி ஒரு பெண்கவிதை வடிப்பதில் என்ன அதிசயம் இருந்துவிடப் போகிறது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும். அதுபோல் ஒரு பெண்ணை ஒரு பெண் காதலாய் உருவகப்படுத்தி கவிதைகளை இங்கு தொகுத்துக் கொடுத்திருக்கிறேன் அவ்வளவே.

இதில் காதல் ரசணை நிறைய இருக்கும். காதலின் நினைவாக ஒவ்வொரு இளைஞனின் காதல் ரணங்களை இந்த எழுத்துக்கள் மூலம் பிரதிபலித்திருக்கிறேன். இதை முழுக்க முழுக்க காதலாகப் பாருங்கள் கவிதையாகப் பார்க்க வேண்டாம். காதல் ஒருவரை கவிஞனாகவும் மாற்றும். ஒரு கவிஞனை காதலியாகவும் மாற்றும் என்னைப் போல.

இந்தக் கவிதை வரிகளில் நான்
என் கவிதைகளுக்கு காதலனாய்
வாழ்ந்து இருக்கிறேன்.

ப்ரியங்களுடன்,
கல்கி கவியரசு

About Kalki Kaviyarasu :

கல்கி கவியரசு பிறந்த ஊர் கோவை மாவட்டம். ஆசிரியராக இருந்து பிறகு தொழில் துறையில் இருந்த ஆர்வ மிகுதியால் தொழில் துறையில் ஈடுபட்டு வருகிறேன். எழுத்தின் மீது இருந்த பற்று காரணமாக குறும்படம், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை, அரசியல் விமர்சனம் என நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.

அது மட்டுமல்லாது சிறுவர், சிறுமியர். பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சமூக விழிப்புணர்வு கருத்தரங்கங்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்தி வருகிறேன்.

மலைவாழ் கிராமங்கள் பழங்குடியின மக்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு சமூகம் சார்ந்த பங்களிப்பில் உதவி செய்து வருகிறேன். மேலும், சாலை விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட குறும்படங்கள் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் என படைப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.2007 முதல் கவிதை, கட்டுரை என எழுதத் துவங்கியது முதல் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

சிறந்த வளரும் தொழில் முனைவருக்கான விருது 2017 ஆம் ஆண்டு வழங்கியிருக்கிறார்கள்.

சிறந்த பன்முகக் கவிஞர், எழுத்தாளர் என்ற விருதை பிரஸ் மீடியா அசோசியேஷன் மூலம் வழங்கியிருக்கிறார்கள். இதுவரை அரசியல் விமர்சனம், விழிப்புணர்வு கட்டுரை என பலவற்றை எழுதிய நான் எனது முதல் கவிதை நூலாக நெடுவாழியை பதிவு செய்கிறேன்.

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  மாணிக்கவாசகம், சோழ மண்டலம்.

திருமதி.கல்கி அவர்கள் முகநூலிலில் பதிவு செய்யும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் அனல் பறக்கும் கவிதைக் கனலாகத் சிறப்பிடம் பிடிக்கும். ஆம்! அவரின் கவிதைக் கனலுக்குள், பெண்ணுரிமைக்கான எழுச்சிக் குரல் தெரியும்; சமூக விரோதிகளுக்கு சாவு மணி அடிக்கும் போர்க்குரல் தெரியும்; சமூக அக்கரையை வெளிப்படுத்தும் தாய்மைக் குரலையும் உணர முடியும். அவருடைய ஒவ்வொரு கவிதை வரிகளுமே இத்தனை குரல்களையும் ஓங்கி ஒலிக்கச்செய்யும் , அற்புதத்தை உணர்ந்த நான் , அவரது கவிதைகளை தொடர்ந்து படிக்கலானேன்..! அப்படிப்பட்ட பெண்ணிரிமைப் போர்க்

Book Review  Mohan A

உங்களின் எழுத்து மழையில் என்னையும் அறியாமல் என்னை நனைய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... நெடுவாழி என்ற நெடுஞ்சாலை பயணம் முடிவில்லாமல் தொடர எனது வாழ்த்துக்கள்

Book Review  Mohan A

உங்களின் எழுத்து மழையில் என்னையும் அறியாமல் என்னை நனைய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... நெடுவாழி என்ற நெடுஞ்சாலை பயணம் முடிவில்லாமல் தொடர எனது வாழ்த்துக்கள்

Book Review  Murugan .C

Neduvalzhi 20 வயது ஆணின் இதயத்திலிருந்து எழுதப்பட்டுள்ளது.எளிய மற்றும் ஒழுக்கமான வரிகள் .

Book Review  Thangam balamurugan

Super❣️

Book Review   கவின்

நெடுவாளி கவிதை தொகுப்பு மிகவும் அருமை இன்னும் நிறைய பாதிப்புகள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

Book Review  மணிகண்டன் தேவக்குமார்

நெடுவாழி நீடுவாழியவே

Book Review  பால்பாண்டியன். வி

நெடுவாழி நீடூழி வாழியவே....

Same Author Books