Home / eBooks / Neengalum Saathikkalam
Neengalum Saathikkalam eBook Online

Neengalum Saathikkalam (நீங்களும் சாதிக்கலாம்)

About Neengalum Saathikkalam :

அனைவருக்கும் பணிவான வணக்கம்.

வாழ்க்கையில் பணத்தை சம்பாதிப்பது எளிது. ஆனால் அன்பு, பாசம், கருணை, நேர்மை, பொறுமை போன்றவற்றை சம்பாதிப்பது மிகுந்த சவால் நிறைந்தது.

ஒருவரிடம் கெட்ட பெயர் எடுப்பது விநாடி நேர வேலை. அதே சமயம் அவரிடம் நல்ல பெயர் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. நம்மை நாம் நிரூபிக்க வேண்டும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கும், முன்னேற்றத்துக்கும் தேவையான பல நற்குணங்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்று அழகான உதாரணக் கதைகளுடன் விவரித்து எழுதப்பட்ட அற்புதமான நூல்தான் ‘நீங்களும் சாதிக்கலாம்’.

இது ஒரு வித்தியாசமான நூல். கோயில், குளம், ஜீவ சமாதி என்று எழுதிய எனக்கு இந்த நூல் ஒரு மாறுதல் அனுபவத்தைத் தந்தது.

ஆன்மிகம் என்பது கோயிலுக்குப் போய் இறைவனை வணங்குவது மட்டுமல்ல. தன்னுடன் பணி புரியும் சக தொழிலாளர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்; எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும்; சகல ஜீவ ராசிகள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதெல்லாமே ஒரு வகையான பக்திதான்.

‘இவள் புதியவள்’ இதழில் ‘வெற்றியின் விதை’ என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் ‘நீங்களும் சாதிக்கலாம்’ என்கிற இந்த நூல். இத்தகைய நம்பிக்கை தரும் கட்டுரைகளைத் தனது இதழில் ஒரு தொடராக எழுத வாய்ப்பளித்த ‘இவள் புதியவள்’ ஆசிரியரும் வெளியிடுபவருமான டாக்டர் மை. கதிர்வேள் அவர்களுக்கு என் பிரத்தியேக நன்றி. இதை எழுதத் தூண்டிய என் நண்பன்

மை. பாரதிராஜாவுக்கும் நன்றி.

நேர்மையான மற்றும் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு படிப்பும் பணமும் மட்டும் அவசியம் இல்லை.

படிக்காதவர்கள் உலகை ஆண்டுள்ளார்கள்.

பணம் இல்லாதவர்கள் - அதாவது சமூகத்தின் அடித்தட்டில் இருந்த பலர், தங்களது உழைப்பாலும் உண்மையாலும் வரலாறே வியக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். அத்தகைய பல அன்பர்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, இந்தத் தொடரை எழுதினேன். ஒரு சில நல்ல விஷயங்களை சொல்ல முடிந்திருக்கிறது என்ற அளவில் எனக்குப் பெருமை.

இதில் உள்ள கதைகளும் அதன் மூலம் சொல்ல வருகிற செய்தியும் வாசக அன்பர்களை மிகவும் ஈர்க்கும் என்று நம்புகிறேன். நம் மனதைப் பாதிக்கிற தகவல்கள்தான் செயலாகின்றன. அதுபோல் இந்த நூலைப் படித்து, அதன்படி ஒருவர் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான்.

அன்புடன்,

பி. சுவாமிநாதன்

About P. Swaminathan :

பி.சுவாமிநாதன், 04 நவம்பர் 1964ம் வருடம் பிறந்தார். சொந்த ஊர் திருப்புறம்பயம் (கும்பகோணம் அருகில்). பட்டப் படிப்பு பி.எஸ்ஸி . (கணிதம்) கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. ஜர்னலிஸம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் 22 வருடமும் திரிசக்தி குழுமத்தில் 3 வருடமும் அனுபவம் உள்ளது.

ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
'பொதிகை' தொலைக்காட்சியில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சி 'யில் 'அற்புதங்கள் தரும் ஆலயங்கள்' என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். சொற்பொழிவுக்காகப் இவர் பல வெளிநாடுகளுக்கு பயனம் செய்துள்ளார். கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றில் சில விருதுகள்:
- செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது)
- சேஷன் சன்மான் விருது 2017
- குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்)
- குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்)
- சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
- பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு)
- ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
- சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை)

இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- ஜீ தமிழ் தொலைக்காட்சி ('தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது)
- சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்)
- விஜய் (பக்தி திருவிழா)
- மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்)
- ஜெயா (சிறப்பு விருந்தினர்)
- தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்)
- நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
- வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
- ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்
- ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்)
- மெகா டி.வி...

ஆன்மிக எழுத்தாளராக:
- தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
- தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
- தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
- சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
- ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
- மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
- திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)

Rent Now
Write A Review

Same Author Books