நேர்மையாக பணியாற்றிய ஒரு நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவமே “நேர்மை ஒரு குற்றமா?” என்ற கதை. ஒரு நல்ல ஆசிரியன் நினைத்தால், முயன்றால் ஒரு மோசமான மாணவனையும் மாற்றி விடமுடியும் என் நம்பிக்கை. இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன்! உணர்த்தியவன் நான்!
‘அண்ணன்’ என்ற கதை எனது நெகிழ்வான உண்மை அனுபவமே! ‘கண்டிஷன் கல்யாணம்’ சிறுகதை முற்றும் கற்பனையான நகைச்சுவைக் கதை! யார் கண்டது? உலகம் போகிற போக்கில் பெண்கள் தாங்கள்தான் தாலி கட்டுவோம் என்று கோரிக்கை வைத்தாலும் வைக்கலாம்!
இந்திய இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு செல்வதைப் பார்த்து வருந்துகிறேன். அதன் வெளிப்பாடுதான் ‘பணம் சிரித்தது’ என்ற கதை. இப்படி ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பு இதிலுள்ள ஒவ்வொரு கதையிலும் உண்டு! அந்த வகையில் இதில் உள்ள கதைகள் உங்களைக் கவரும் என்று நம்புகிறேன்.
வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். இதுவரை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பட்டிமன்றங்கள், ஐநூறுக்கும் மேற்ப்பட்ட வழக்காடு மன்றங்கள்கவியரங்கங்கள், கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் பங்கு வகித்துள்ளார். இவர் உலகத்தமிழ் மாநாடு, உலகத் திருக்குறள் மாநாடு, கம்பராமாயண மாநாடு போன்று பல மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.
இதுவரை பதினேழு நூல்கள், இரண்டு வாணொலி நாடகங்கள், நான்கு மேடை நாடகங்கள் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள், தினமலர், தினகரன், கல்கி, தேவி போன்ற பல பிரபல இதழ்களில் வெளி வந்துள்ளன.
இலட்சியக் கவிஞர், குளிர்விக் கொண்டல், கவிதைக் கணல், கவிஞர் திலகம், கவிச்செம்மல் போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Rent Now