போதை மருந்துகள் ஒரு குடும்பத்தின் அமைதியை, நாட்டின் வளர்ச்சியை எப்படி கெடுக்கும் என்பதை காட்டும் கதை. நாம் காணும் உலகம் வேறு நிழல் உலகம் வேறு. அவர்களின் நியாயங்கள் நமக்கு அதிர்ச்சியை ஊட்டும். இக்கதையின் நாயகனும், நாயகியும் நிழல் உலகத்துக்கு எதிராக எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை இக்கதையில் திகிலூட்டும் சம்பவங்களோடு காண்பித்திருக்கிறார்.
சுதா ரவி என்கிற புனை பெயரில் கடந்த ஆறு ஆண்டுகளாக எழுத்துப் பயணத்தில் இருக்கும் இவர் பதினொரு நெடுங்கதைகளும், பதிமூன்று குறுநாவல்களும், முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். இவரின் சிறு கதைகளும், கட்டுரைகளும் ராணி இதழில் வெளி வந்திருக்கின்றது.
பதினொரு நெடுங்கதைகளும் , பதிமூன்று குறுநாவல்களும் புத்தகமாக வெளி வந்திருக்கின்றது. இவரின் கதைகளில் குடும்ப சூழல்களில் ஏற்படும் உறவுச் சிக்கல்களும், சமூகத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும். இவரின் கதைகள் பல்வேறு தரப்பட்ட ஜானர்களில் எழுதப்பட்டிருக்கும். நகைச்சுவை, திகில், மர்மம், குடும்பம் என்று அனைத்து வகையிலும் எழுதி இருக்கின்றார்.
இவரின் கதைக்கரு நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளை பேசி இருக்கும். இவரை உங்களுக்கு முன்பே அறிமுகமாகி இருந்தாலும், புஸ்தகாவில் இணைவதன் மூலம் உங்களை மகிழ்ச்சியோடு தனது படைப்புகளின் மூலம் சந்திக்க வருகிறார்.அவரின் படைப்புகளை பற்றி குறிப்பிட விரும்பினால் sudharavi0172@gmail.com என்கிற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Rent Now