வணக்கம், இது எனது மூன்றாவது நாவல். அறிவியல் தகவல்களுடன் பல எதிர்பாரா திருப்பங்களையும் பிணைத்து பின்னப்பட்ட காதல் கதை இது.
தலைப்பு : நின் உச்சிதனை முகர்ந்தால்...
கதாநாயகன் : அர்ஜுன் ரவிச்சந்திரன்
கதாநாயகி : சுஹாசினி (ஸ்வீட்டி)
கதைக்கரு:
கதையின் தொடக்கத்தில் நவ நாகரீக யுவதியாக சுற்றித்திரியும் நாயகி சுஹாசினி தன் அன்னையின் வற்புறுத்தலால் ஆராய்ச்சியாளனான அர்ஜுன் ரவிச்சந்திரனை திருமணம் புரிகிறாள். நாயகன் குடும்பத்தின் மீது தனக்குள்ள தனிப்பட்ட வன்மத்தினாலும் அவனை திருமணம் செய்து கொள்ளும் சுஹாசினி இறுதியில் தன் தவறான புரிதல் உணர்ந்து அவனுடன் இனிமையான இல்வாழ்க்கையில் ஈடுபட்டாளா? இல்லையா? என்பதே இக்கதை. கதையில் பல அறிவியல் தகவல்களையும் கூற முயற்சித்திருக்கிறேன் ப்ரெண்ட்ஸ். அப்படியே ரஷ்யாவின் நேவா நதிக்கரையையும் கதைக்குள்ளப்போய் ஒரு சுத்து சுத்திப்பார்த்துட்டு வாங்க.
வணக்கம். நான் ஷிவானி செல்வம். நான் தமிழகத்தில் மண் மணமிக்க மதுரையில் வசிக்கிறேன். புத்தகங்கள் வாசிப்பதென்றால் எனக்கு அலாதி பிரியம். அந்த தாக்கத்தில் எழுத்துலகிலும் நுழைந்து விட்டேன். நான் இதுவரையில் நிஜமது நேசம் கொண்டேன், காதலா! காதலா!, நின் உச்சிதனை முகர்ந்தால், காதலாற்றுப்படை என நான்கு குடும்ப நாவல்களை எழுதியுள்ளேன். வாசகர்களின் ஊக்கத்தில் மேலும் மேலும் முன்னேறி கொண்டிருக்கிறேன். ஆகையால் என்றும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாகிறேன்.
Rent Now Sivagami Haresh
Nice story