நம்ரதாவும் பிரதீப்பும் காதல் மணம் புரிந்தவர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் இடையூறால் பிரிய நேரிடுகிறது. விவாகரத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து மனைவியைத் தேடி வரும் பிரதீப் நம்ரதாவுடன் சேர்ந்தானா? அவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசியதா?
கதையினுள் சென்று பாருங்கள் நட்பூக்களே!
வணக்கம் வாசக பெருமக்களே!
இந்த புத்தாண்டில் புஸ்தகாவோடு இணைந்து உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நிறைய நல்ல வாசகர்கள் உள்ள புஸ்தகாவில் என் நூல்களும் இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
சிறுவயதில் இருந்து நிறைய கதைகள் எந்த வகையினமாக இருந்தாலும் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தம். என் ஆதர்ச எழுத்தாளர்கள் பலரும் இருக்கும் புஸ்தகாவில் என் நூல்களும் இடம்பெறப் போவதில் எனக்கு மிகவும் பெருமையே. இதுவரை ஏழு கதைகள் எழுதியிருக்கிறேன். அவை யாவும் புஸ்தகாவில் உங்களின் பார்வைக்கு வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.
இன்றைய பரபரப்பான உலகத்தில் மனதிற்கு ஆசுவாசம் தரக்கூடிய இனிமையான காதல் கதைகளை தருவதையே என் நோக்கமாக கருதுகிறேன். படிக்கிற நேரத்தில் மனதுக்கு இனிமை தருவதோடு எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் நேர்மறை சிந்தனைகளும் என் கதைகளில் இருக்கும்.
என் கதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை neelamani.writer@gmail.com என் இணைய அஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.
அன்புடன் , நீலாமணி
Rent Now