Home / eBooks / Ninaivalaigalil Paavendhar
Ninaivalaigalil Paavendhar eBook Online

Ninaivalaigalil Paavendhar (நினைவலைகளில் பாவேந்தர்)

About Ninaivalaigalil Paavendhar :

'நினைவலைகளில் பாவேந்தர்' என்னும் இந்நூலை, தமிழ் மக்களிடையே உலவ விடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த நூல் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் வந்திருக்க வேண்டிய நூல் ஆனால், காலம் கடந்து வந்தாலும் இந்நூலில் பொதிந்துள்ள கருத்தும், சிவையும் படிப்போர் நெஞ்சத்தில் என்றும் பாகாக இனிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பாவேந்தரின் இறுதிக்கால வாழ்க்கை நிகழ்ச்சிகளின் சுவையான பகுதிகளைத் தொகுத்துரைக்கும் நூலாகவே இந்த நூலை எழுதியுள்ளேன். பலர், 'பாவேந்தருடைய உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளை நீங்கள் எழுதத் தவறிவிட்டீர்கள்; காலம் கடத்திவிட்டீர்கள்!' என்று உரிமையோடு என்னைக் கடித்து கொண்டதுண்டு. இந்தக் கருத்தில் கொஞ்சம் நியாயம் இருப்பதும் உண்மைதான்! ஏனெனில், பாவேந்தர் மறைந்த காலம் தொட்டு பல பத்திரிக்கைகளில் பாவேந்தர் நினைவுகளைக் கட்டுரையாக எழுதி வந்திருக்கிறேன் என்பது அவர்களில் சிலருக்குத் தெரியாது. பாவேந்தர் மறைந்த 1964-ம் ஆண்டு, மே திங்கள், 'ராணி' பத்திரிக்கையில் 'பாவேந்தர் படமெடுக்க வந்தது ஏன்?' என்று நெடுய கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். மக்கள் எழுத்தாளரும், 'ராணி' பத்திரிக்கை ஆரிசியருமான திரு. மாரிசாமியின் வேண்டுகோளுக்கிணங்க அந்தக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதைப்போல 'மாலை முரசு' செய்தி ஆசிரியர் திரு. ராமசாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், 'மாலைமுரசு' நாளேட்டில், 'நெஞ்சில் நிலைத்த நினைவுகள்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரையாக, பல சுவையான செய்திகளைத் தொகுத்து தொடர்ந்து எழுதிவந்தேன். அந்நாளில் 'திணமணி கதிர்' வார ஏட்டின் ஆசிரியர்களாக இருந்த திரு.கே.ஆர்.வாசுதேவன், திரு. தீபம் பார்த்தசாரதி போன்றோரின் வேண்டுகோளுக்கிணங்க 'தினமணி கதிரி'லும் பாவேந்தர் தொடர்பான நினைவுக் கட்டுரைகளை எழுதினேன். 'சினிமா எக்ஸ்பிரஸ்' ஆசிரியர், திரு. இராமமூர்த்தி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் பேட்டிகளிலும் பாவேந்தர் தொடர்பான பல சுவையான செய்திகளை நினைவுகூர்ந்தேன். அதுமட்டுமல்லாமல், பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே பல சிறிய, பெரிய பத்திரிக்கைகளில் பாவேந்தர் நினைவுகளை அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். தமிழகத்தின் பெருமைமிகு கவிஞரும், பாவேந்தரின் பேரன்புக்கு உரியவருமான கவிஞர் முருகுசுந்தரம் அவர்கள் தொகுத்து, 1980-ம் ஆண்டு வெளிவந்த 'அரும்புகள், மொட்டுகள், மலர்கள்' என்ற நூலிலும் பாவேந்தர் தொடர்பான பல அரிய செய்திகளைத் தாங்கிய என் நினைவுக் கட்டுரையும் அடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக, மாபெரும் மக்கள் கவிஞராக வாழ்ந்த உலகப் பெருங்கவிஞர் பாரதிதாசனாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, மனிதநேயப் பண்புகளை, மேடைகள் தோறும் முழுங்கி வந்திருக்கிறேன். இவற்றையெல்லாம் எதற்கு இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், 'இத்தனை ஆண்டுகள் நான் சும்மா இருந்துவிட்டேன்!' என்ற பழி என் மீது சுமத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். பாவேந்தரோடு நான் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்ச்சிகளையெல்லாம் குறித்து வைத்து, பலவற்றை கட்டுரையாகவும் அவ்வப்போது எழுதிவைத்திருந்தேன். 'பழுத்து இற்றுப்போன நிலையிலுள்ள இந்த நினைவுக் குறிப்புகள் அனைத்தையும் பொறுமையாக உட்கார்ந்து, ஆராய்ந்து நூலாக வடிவமைக்கவேண்டும்' என்று நினைத்த போதெல்லாம் ஒய்வின்மை என்னைச் சூழந்து கொண்டது. அப்படி நூலாக்கினாலும் பெரிய நூலாகத் தொகுக்க வேண்டும; அப்படித் தொகுத்தால் அந்த நூலை வெளியிட எந்தப் பதிப்பகம் முன்வரும் என்ற கேள்வியும் என்னுள் அவ்வப்போது எழுந்ததுண்டு. புரட்சிக் கவிஞரின் வாழ்க்கை ஒரு நெடிய வாழ்க்கை. ஏற்த்தாழ எழுபத்துநான்கு ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்த அவருடைய வாழ்க்கையில் தொடர்பு கொண்டோர் ஏராளமானவர்கள் உண்டு. அவரது தோழராக, தொண்டராக, அன்பிற்குரியோராக அவர் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தோர் மிகப் பலரை இந்நூலில் நினைவுகூர்ந்துள்ளேன். அவர்களில் நானும் ஒருவன் என்பதைத் தமிழகம் நன்கறியும். கவிஞரின் கடைசிக் காலத்தில் - சென்னையில் அவர் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுச் செயல்பட்ட அந்த இறுதிக் காலகட்டத்தில் - நடந்த சுவையான நிகழ்ச்சிகளை மட்டுமே, இங்கே சாறுபிழிந்து வரலாற்று ஆசிரியர்கள் முன்னும், உங்கள் முன்னும் வைக்கிறேன். பாவேந்தரைப் பற்றி தமிழ் மக்களுக்குச் சொல்லவேண்டிய்வை, அறிவிக்க வேண்டியவை இன்னும் ஏராளலாக உள்ளன. அவையனைத்தையும் சேர்த்து நூலாக்கினால் பெரு நூலாக வரும், தமிழ்நாட்டில் நூல் வாங்கிப் படிக்கும் சுவைஞர்களுடைய நலன் கருதி இந்நூலை எழுதியிருக்கிறேன். "பாவேந்தர் நினைவுகளை - அவரின் இறுதிக்கால உண்மை வாழ்க்கை நிகழ்ச்சிகளை நீங்கள்தான் சரியாக எழுதமுடியும்; எனவே நூலாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்" என்று என்னைத் தூண்டியவர்கள், ஊக்கமூட்டியவர்கள் மிகப் பலர். அவர்களுக்கெல்லாம் என் நன்றி. புரட்சிக் கவிஞர் நினைவுகளை விரைவில் எழுதி நூலாகக் கொண்டுவர உன்னால் முடியவில்லை என்றால் என்னிடம் கொடு; நான் நூலாக்கி வெளிக்கொண்டு வருகிறேன்' என்று தொடர்ந்து என்னைத் தூண்டிய பாவேந்தர் திருமகன் அண்ணன் மன்னர்மன்னன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்க்கையில் நான் பாவேந்த்ரோடு வாழ்ந்த காலத்தை மட்டும் வசந்த காலமாகக் கருதுகிறேன்/ அவரோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடிப் பொழுதையும் உள்ளத்தால் நேசித்தேன். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கண்டு கண்டு களித்தேன். தன்னைத் தொடர்ந்த துன்பங்களையும், சூழ்ச்சிகளையும் தூக்கியெறித்து வீறுநடை போட்ட அந்த ஏறுநடைப் புலவரின் துணிச்சலைக் கண்டு வியந்தேன்! அவரைச் சூழ்ந்த துன்பங்களைக் கண்டபோதெல்லாம் துடித்தேன் - கண்ணீர் உகுத்தேன். ஒரு காலகட்டத்தில், அறியாமையில் முழ்கியிருந்த தமிழினத்தை ஆண்மை இனமாக மாற்ற, சீறும் சிறுத்தையாக உழைத்த அந்த செழுந்தமிழ்ப் பாவேந்தர், மனித நேயத்தின் மறுவடிவமாக வாழ்ந்தார். மனித சமூகத்திற்கு எதிராக உலகத்தின் எந்த மூலையிலும் நடந்த இழிசெயலுக்கும் வருந்தினார். இந்திய ஒருமைப்பாட்டின் தேவை மிகுந்தபோது இந்தத் திருநாட்டின் வெற்றி முகத்திற்காகப் பாட்டு முழக்கமிட்டார். நலிந்தோரின் மீட்சிக்காக வாழ்ந்த நாட்டுநலக்கவிஞரின் கனிந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உயிர்த்துடிப்பானவை. பாவேந்தர் கொள்கைகளை என் உணர்வில் கலந்து அறிமுகப்படுத்யவர் என் ஆசான் தமிழ் மறவர், புலவர், வை.பொன்னம்பலனார் அவர்கள், இந்நூல் மலரும் இவ்வேளையில் அப்பெருமகனாரின் நினைவுகளை இதயத்தால் போற்றி வணங்குகிறேன். ஆனந்தவிகடன், 1963-ம் ஆண்டு, 'மகாகவி பாரதியார்' சிறப்பிதழில், என் கவிதையை பரிசு பெற்ற கவிதையாக வெளியிட்டு, என்னை மகிழ்வித்தது. இப்போது, விகடன் பிரசுரமாக 'நினைவலைகளில் பாவேந்தர்' நூல் வெளிவருவது என்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத்தருகிறது. விகடன் பிரசுர பதிப்பாளருக்கும், ஆசிரியர் குழுவுக்கும் என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னந்தனியாக நின்று தமிழ்ப் பயணம் தொடரும் என்னை, என்றும் தொடர்ந்து ஆதிரித்துவரும் தமிழ் மக்கள், இந்த முயற்சியிலும் எனக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்று மனதார நம்புகிறேன். வாழ்க புரட்சிக் கவிஞர் புகழ்! வெல்க மனிதநேயக் கொள்கைகள்! --பொன்னடியான்.

About Poet Ponnadiyan :

Poet Ponnadiyar as you may be aware of, is an outstanding Tamil Poet and a front ranker in the literary progeny of Bharathi and Bharthidasan. He has been doing yeomen service to Tamil through various institutions such as Tamil Poets Association, Sea-shore Poets Meet, Writers Forum etc. He has been editing Mullaicharam, a popular Tamil monthly magazine with a unique record of continuous publication for the past 49 years with a rare sense of social awareness and contemporary commitment. As the author of several books, he has received honours and awards such as the Bharathidasan Award of the Government of Tamilnadu, 'UNESCO' award etc. His poems have been translated into several languages including English, Hindi, Persian etc. He is the first Poet whose poems have been translated into Persian. He has been conferred with an important and ever last title "KALAIMAMANI" by Government of Tamilnadu for the meritorious and worth mentioning prolonged service in the field of art, literature and Tamil culture especially for his restless 50 years of Yeoman service for Tamil poetry.

Rent Now
Write A Review

Same Author Books