தன்னை வளர்த்த இரண்டு அத்தைகளில் யாருக்கு அவன் முன்னுரிமை தரப்போகிறான்?
ஆதிக்கு, ருக்மிணியின் மகளான ஸ்ரீநிஷாவை மணந்து கொள்ளப்பிடிக்குமா? அல்லது காமினியின் மகளான தருணிகா அவன் இதயராணியாகக் கொலுவிருக்கப் போகிறாளா?
ஜெயிக்கும் கட்சி, தோற்கும் கட்சியிடம் எப்படி நடந்துகொள்ளும்?
ஒரே குடும்பத்துக்குள் பலவகையான அதிரிபுதிரி கதாபாத்திரங்கள். சரவெடி வசனங்கள். வாசித்துப் பாருங்களேன்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now