Home / eBooks / Nizhal Nijamagirathu
Nizhal Nijamagirathu eBook Online

Nizhal Nijamagirathu (நிழல் நிஜமாகிறது)

About Nizhal Nijamagirathu :

ஆசிரியரின் முதல் நாவல்..

நாயகி துளசி.பெற்றோர் இல்லாமல் வயதான பாட்டிதான் உலகம் என வாழுபவள்.........இரட்டையர்கள் ராம்கரண், ராம் சரண்.பெற்றவர்களை தவிர மற்றவர்களால் கூட இனம் பிரிக்கத் தெரியாத உருவ ஒற்றுமை. கரணுக்கு உயிர்கொல்லி வியாதி. தான் இறக்கும் முன் தன் பிரதிபிம்பமாய் உலகுக்கு தன் வாரிசை கொடுக்க நினைக்க...அங்கே ஆரம்பிக்கிறது அனர்த்தம். கரணுக்கு உதவத் துடிக்கும் அவன் உடன் பிறந்த சரண்..

நாயகி துளசிக்கோ எதிர்பாரா பண நெருக்கடி. பாட்டியை காக்க நாயகனுக்கு யார் என்று தெரியாமலே செயற்கை குழாய் மூலம் பிள்ளை பெற ஒப்புக்கொள்ள, .திருமண பந்தம் மூலம் இணைய நினைக்கும் நேரத்தில் எதிர்பாரா விதத்தில் சிக்கல் உருவாகிறது.

கரண் என்னவானான்? அவன் எதிர்பார்த்தபடி தன் வாரிசை கொடுக்க முடிந்ததா??.. சரண் எந்த விதத்தில் அவனுக்கு உதவுகிறான்??துளசி நினை த்தது நடந்ததா??. யாரும் யாரும் இணைந்தார்கள்??...இவர்கள் எண்ணமெல்லாம் ஈடேறியதா??.....

நிழல் நிஜமானதா.. இந்த இரண்டு சகோதரிகளின் முதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் தோழமைகளே.....

About Srilakshmi :

ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.

சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.

இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்

எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.

Rent Now
Write A Review