விஸ்வஜித்..! சஞ்சய்..!
அந்த நகரத்தின் தொழில்வளர்ச்சியில் தனக்கும் சிறிதளவு பங்குண்டு என்று சொல்லிக்கொள்ளும் தொழிலதிபர் ஸ்ரீகரனின் இரட்டை வாரிசுகள்.
அஸ்வினி இவர்கள் இருவரில் யாருக்குச் சொந்தமாகப் போகிறாள்?
ஹ்ருதயாகணபதி, அபிமன்யு மற்றும் ஹாசினி என்று கதை முழுவதும் தெவிட்டாத காதலைச் சுமந்து செல்லும் கதாபாத்திரங்கள். ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now