Oliyai Thedi... (ஒளியைத் தேடி…)
About Oliyai Thedi... :
தமிழ்ப் படைப்புலகில் முன்பெல்லாம் சிறுகதை எழுத்தாளர்கள் அதிகரித்திருந்தார்கள். கவிதை எழுதுபவர்கள் குறைவாக இருந்தனர். கவிதையின் கட்டுப்பாடுகளும் வடிவங்களும் சிதைக்கப்பட்ட பிறகு எழுதத் தெரிந்த எல்லோருக்குள்ளும் கவிஞர்கள் பிறப்பெடுக்கத் தொடங்கினர். சிறகதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்குச் சற்றே பின்டைவு ஏற்பட்டது. "புகழ்மிக்க ஏடுகளும் இதழ்களும் சிறுகதைகளை மிகவும் சுருக்கமாக வெளியிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதால் சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டுவரப் பதிப்பகங்களை நாடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பதிப்பகங்களோ, புகழ்மிக்க இதழ்களில் வெளியான சிறுகதைகளை மட்டுமே தொகுத்தளிக்க முடியும்" என்றும் கூறுவதுண்டு.
நன்மை தீமைகளை எடுத்துக்காட்டும் இயல்புடையனவாக இருக்கின்றன. சிறுகதைகளுக்கென்று புதிய இலக்கணங்களையும் உத்திகளையும் பலர் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். இயல்பு நிலையில் கதை சொல்லும் உத்தி மறைந்து வருகிறது. இயல்பான கதைகள் காலத்தின் உண்மையான சாயல்களைக் காட்ட வல்லவை.
படிக்கப் படிக்க அனுபவம் வளருகிறது என்பதால் தான் நான் படிக்கும் சுபாவத்தை அதிகம் வளர்த்துக்கொண்டுள்ளேன். ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் இருந்த போது பல சிறுகதைகளை எழுதி பாதுகாப்பாக வைத்திருந்தமையால் ஒரு நூலாக வெளிவர வாய்ப்பு கிடைத்தது.
Rent Now