Home / eBooks / Om Sakthi
Om Sakthi eBook Online

Om Sakthi (ஓம் சக்தி)

About Om Sakthi :

‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று பரவசப்பட்டான் மகாகவி பாரதி. அவன் நோக்கில் எங்கும், எந்த நிகழ்வுக்கும் அவன் வணங்கிய பராசக்தியே ஆதாரமாக இருப்பதை உணர்ந்து சிலிர்த்தான். எண்ணம் கருவாகி, செயலாக பிறப்பெடுக்கிறது. இப்படி அடிப்படையில் எண்ணம் முதலாக எல்லாமே சக்தியின் அம்சம்தான். எதையும் பிறப்பிக்கும் வகையில் எல்லாமே தாய்மையின் கருணைதான். விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் ‘ஆனந்தம் பரப்பிரம்மேதி யோனி’ என்று ஒரு சொற்றொடர் வருகிறது. அது தாய்மையைப் போற்றும் சொற்றொடர் என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் புரியும். ஆமாம், ஓர் உயிருக்கு உடல் கொடுத்துப் பிரசவிக்கும் ஒரு பெண்தான் அந்தப்பெருமையில் எவ்வளவு சந்தோஷப்படுகிறாள்! அதேபோல அவ்வாறு பிறப்பெடுக்கும் உயிர் நலமாக, வளமாக, நீண்டநாள் வாழ்வதைக் காணவும் அவள்தான் எவ்வளவு துன்பம் மேற்கொள்கிறாள்! ஒரு மனிதத் தாய்க்கே இப்படி ஒரு பெருமை, பொறுப்பு, ஆனந்தம் என்று இருக்குமானால், இந்த பிரபஞ்சத்தையே உற்பவித்து, காத்து அருளும் அன்னை பராசக்தியின் மகிமையை என்னென்று சொல்வது!

அந்த பராசக்திதான் உலகெங்கிலும் வழிபாட்டு அம்மனாக வியாபித்திருக்கிறாள்.

About Prabhu Shankar :

அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.

சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

Rent Now
Write A Review