என் பெயர் கீதா மதிவாணன். பிறந்து வளர்ந்த ஊர் பொன்மலை, திருச்சி. திருமணத்துக்குப் பின் சென்னையில் சில வருடங்கள் வசித்த பின் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறேன். கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகிறேன். மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர், அக்ரி டாக்டர், பூவுலகு போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, நிலாச்சாரல், அதீதம், பதிவுகள் போன்ற இணைய இதழ்களிலும் என்னுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பான ‘என்றாவது ஒரு நாள்’ என்னும் என் சிறுகதைத் தொகுப்பு அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் நான் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பறவை கூர்நோக்கலும் இயற்கைசார் புகைப்படங்கள் எடுத்தலும் பொழுதுபோக்குகள்.
Rent Now ஞா.கலையரசி
எடுத்துரைத்திருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்! சூழலியல் ஆய்வுக்குத் துணை செய்யும் கட்டுரைகள்!
ஞா.கலையரசி
ஆஸ்திரேலிய தனித்துவமிக்க உயிரின்ங்கள் வாழும் ஒரு நாடு. அந்நிய மண்ணிலிருந்து இங்குக் கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒட்டகம், நாய், பூனை, பன்றி, கழுதை, எருமை. போன்ற விலங்குகளின் கட்டுக்கடங்கா இனப்பெருக்கத்தால், சொந்த மண்ணின் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கியது இந்நூலின் முதல் பாகம்; இந்த இரண்டாம் பகுதியில், அந்நிய தாவரங்களின் அறிமுகத்தால் இந்நாட்டின் இயற்கைச்சூழலும், உயிரியல் சமன்பாடும் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன என்பதைப் படங்களோடும், புள்ளிவிவரங்களோடும் சுவாரசியமாக