அசிஸ்டெண்ட் டைரக்டரான தாஸ் தன் முதல் பட வாய்ப்புக்காக பல கதைகளை தயாரிப்பாளரிடம் சொல்லி தோற்கிறான்.பேய் கதைதான் டிரெண்ட் என்பதால் தனக்கு திடிரென தோன்றும் ஒரு பேய் கதையை பாதிவரை கூறி பட வாய்ப்பை பெறுகிறான்.அவன் சொன்ன பாதிகதை அவனது அக்கா வீட்டிலேயே நடந்து கொண்டிருப்பதை அறிந்து அதிர்கிறான். கற்பனை உண்மையாகவே நடப்பதால் தாஸ் பயந்து போகிறான்.படத்தின் மீதி கதையை தாஸ் எப்படி எழுதி முடிக்கிறான் என்பதே கதை!
ஈரோடு கார்த்திக்காகிய நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை "ப்ரதிலிபி"தளத்தில் எழுதியிருக்கிறேன்.ஆதித்தன்,அரிஞ்சயன் என்ற இரண்டு சகோதரர்களை வைத்து லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆங்கில தொடர் போல் எழுத முயற்சி செய்து 7 கதைகளை இதுவரை எழுதியுள்ளேன். மிஸ்ட்ரி, திகில், சஸ்பென்ஸ், க்ரைம் என பல ஜேனர்களில் எழுத முயற்சி செய்பவன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் எளியவன் நான்.
Rent Now