Lakshmi Subramaniam
திருமதி எஸ். லட்சுமி சுப்பிரமணியம் எழுதியுள்ள இந்த நாவல்-ஒரு காதல் காவியம்.
திடுக்கிடும் சம்பவங்கள் இல்லை. திடீர்த் திருப்பங்கள் இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் இல்லை.
ஆனால், மூன்றே பாத்திரங்களைக் கொண்டு ஒரு ஆண் இரண்டு பெண்கள்- கமல், நீரு, அனு மூவரையும் வைத்து ஒரு காதல் கவிதா சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.
வெறும் மன உணர்வுகளை வெளியிடும் முறை யிலேயே படிப்போரை மயக்கி விடுகிறார்.
அடடா என்ன நடை! குற்றாலச் சாரலில், குளிர்ந்து வரும் தென்றலில் மிதந்து வரும் மெல்லிய மணத்தை அனுபவிப்பது போல.
ஊருக்கு வெளியே, ஆற்றின் வெண்மணலில், அமுத நிலவொளியில், ஏகாந்தமாய் அமர்ந்து கொண்டு, வெகு தூரத்திலிருந்து வரும் நாதஸ்வர இசையை அனுபவிப்பது போல....
நீங்கள் படித்து அனுபவித்த பிறகுதான் அந்த தீந்தமிழ் கவிதை நடையைப் புரிந்து கொள்ள முடியும்!
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.