Ramkumar Singaram
நான் நடந்த 20 ஆண்டுகளாக தன்னம்பிக்கை, தொழில் முனைவு. நிர்வாகவியல் ஆகிய துறைகளை உற்று நோக்கி வருகிறேன். இதற்கென, சர்வதேசப் புகழ்பெற்ற பல பேச்சாளர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். இவர்களெல்லாம் தங்கள் மேடைப் பேச்சுகளை சுவாரஸ்யப்படுத்துவதற்காக ‘கதை’ சொல்வதை ஒரு உத்தியாகக் கையாளுகிறார்கள். பேச்சைத் தொடங்குவதற்கு முன்பும், பேச்சிற்கு நடுவிலும், பேச்சின் முடிவிலும் இவர்கள் கதைகளைச் சொல்கிறபோது, கூட்டத்தினர் குண்டூசி சத்தம் கூட தெளிவாகக் கேட்கிற அளவிற்கு அமைதியாகி விடுவதைப் பார்த்திருக்கிறேன்.
இந்த நூலில் உள்ள ஏதேனும் சில கதைகள், நிச்சயம் உங்கள் உள்ள உணர்வைத் தட்டி எழுப்பும்; மாற்று திசையில் சிந்திக்கத் தூண்டும்.
பத்திரிகையாளர் – எழுத்தாளர் – பேச்சாளர் - மக்கள் தொடர்பு ஆலோசகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் இவர்.
94.3 ரேடியோ ஒன் எஃப்.எம்.-ல் 1000 மணி நேரத்திக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். மக்கள் தொலைக்காட்சி, ஜெயா பிளஸ், கலைஞர் செய்திகள் பொதிகை உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட நேரலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவம் கொண்டவர்.
“செலவைக் குறைங்க சார்’, ‘தொழில் செய்ய விரும்பு’, ‘அசத்தல் தொழில்கள் 64’, ‘பணக்காரராக 10 ரகசியங்கள்’, ‘தொழிலாளி டூ முதலாளி’, ‘ஒரு கதை ஒரு விதை’, ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?’ ஆகிய ஏழு புத்தகங்களையும், ‘10 Zero Budget Marketing Ideas’ என்ற E-Book - ஐயும் எழுதியுள்ளார்.
தினத்தந்தி, தினமணி, குமுதம், குங்குமம், மங்கையர் மலர் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருபவர்.
தற்போது நாணயம் விகடன் வார இதழில் ‘சக்ஸஸ் பஃர்முலா’ என்ற தலைப்பில் தொடர்கட்டுரை எழுதிவருகிறார். மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில், வியாழன்தோறும் 8:15 முதல் 8:25 மணி வரை ‘கற்றலும் கற்பித்தலும்’ என்ற தலைப்பில் பேசி வருகிறார். இவரது பேச்சுக்கள் ‘சிகரம் தொட்ட மனிதர்கள்’ என்ற தலைப்பில் ஒரு Audio CD - யாகவும் வெளியாகியுள்ளது.
கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தமிழகத்தின் நம்பர் ஒன் செய்தி பரப்பும் நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளாக திறம்பட நடத்திவருகிறார்.