என் சொந்த அனுபவமும், நான் சந்தித்த சிலரின் அனுபவங்களும், என் நண்பர்கள் கூறிய சில சம்பவங்களும்தான் இக்கதைகளுக்கு அடிப்படை. ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் சட்டதிட்டத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஒரு சில கதைகள் இன்றைய சமுதாயத்தின் பார்வையாக அமைந்துள்ளன.
ஒரு நாவல் எழுதவேண்டும் என்பதே என் அடுத்த இலக்கு. இந்த 75 வயதில் இந்த ஆசை கொஞ்சம் அதிகம் தானோ என்று தோன்றினாலும், இப்பணியைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். இறைவன் இப்பணியை முடிக்க எனக்கு தேவையான அளவு நேரமும் சக்தியும் அளிக்க வேண்டுகிறேன்.
என் கதைகளுக்கான உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். அது பூங்கொத்தாகவோ அல்லது கற்களாகவோ எதுவாக இருந்தாலும் ஏற்கிறேன். என் கட்டுரைகளுக்கு இதுநாள் வரை எனக்குக் கிடைத்த எண்ணிக்கையில் பெருகும் என் வாசகர்களும், அவர்கள் தயங்காமல் அளிக்கும் ஊக்கமும்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்னை எழுதத் தூண்டுகிறது.
- ஆர்.வி. ராஜன்
சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Rent Now