தன் எழுத்தாக்கம் எப்போதும் தனித்துவம் அமைய வேண்டும், வாசகர்களுக்கு புத்துணர்வளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, இலக்கிய உலகில் பயணித்து வருகிறார்.
வாழ்வியலை வார்த்தைகளாக வார்த்திருக்கிறார்.
கண் கண்ட கவின் காட்சிகளை கவித்துவமாக்கியிருக்கிறார்.
எண்ணங்களை எழில் எழுத்தாக்கியிருக்கிறார்
அழகியலை அர்த்தமாக்கியிருக்கிறார்.
கேள்விகளைக் கேட்கிறார்…
தாய்ப் பாசம் வணங்குகிறார்…
மகள் பாசம் வளர்க்கிறார்...
உண்மைநிலை தேடுகிறார்…
நிதர்சன நிகழ்வுகளோடு நாட்களைக் கடத்த முயல்கிறார்…
நண்பரின் காரமும் உவர்ப்புமான தலைப்பில் அமைந்த இப்புத்தகம், அறுசுவைக்கும் அப்பாற்பட்ட ஒரு தனித்துவ ருசியைத் தரும்
ஆழியின் அமைதியாய்... ஆழ் மனதில் புதையலாய் தமிழின் ஊற்று... இவரே "சின்னவள்" நூலாசிரியர் செல்வகுமார்.
ஆகச்சிறந்த எழுத்துக்கள்,தங்களை ஏற்க தவம் செய்கின்றன இவரிடம்....
புதுக்கோட்டையில் காவேரி நகரில் பிறந்ததாலோ இவரின் எழுத்துக்கள் மண் வாசம் கொண்டவையாய்.....
அரிதாய் கவிதை எழுதினாலும், அவை அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை என பறைசாற்றிப் பரிசுகளை அள்ளிசெல்லும்...
புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர்2015 விழாவில் கவிதைப்போட்டிக்கான முதல்பரிசை உலக அளவில் வென்றுள்ளார் .
எப்போதும் முன்னிருக்க விரும்பாது, பின்னின்று அனைவரையும் முன்னேற்றும் பண்பாளர்...
புதுக்கோட்டை கலை இலக்கியப் பெருமன்றத்தின் நகரத்தலைவர்.... 2016 கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டை புதுக்கோட்டையில் மிகச் சிறப்பாக நடத்தி பாராட்டு பெற்றவர் .
சிறந்த இலக்கிய விமர்சகர்... வாசிப்பே சுவாசமாய் இவரது வாழ்க்கை உயிர்ப்போடு திகழ்கின்றது...
நான் ஒன்று சொல்வேன் என்ற வலைத்தளத்தில் தனது எண்ணங்களை கவிதையாகவும் கட்டுரையாகவும் செதுக்கும் காலச்சிற்பி...
எழுத்துக்களால் தனது குழந்தைகளை வார்க்கின்ற ,தந்தையாக மிளிர்கின்றார்.
இவரது முதல்நூல் இது....
Rent Now இராய செல்லப்பா
புதுக்கோட்டையின் சிறப்பான கவிஞர். தெளிவும் எளிமையும் உணர்ச்சி ததும்பலும் பல கவிதைகளின் அடிநாதமாக உள்ளது. ஒன்றுவிடாமல் படிக்கமுடிகின்ற கவிதைகள்.