Panakkaararaaga 10 Ragasiyangal

Ramkumar Singaram

0

0
eBook
0
Downloads3 Downloads
TamilTamil
ArticlesArticles
Self ImprovementSelf Improvement
Page144 pages

About Panakkaararaaga 10 Ragasiyangal

ஒவ்வொருவருக்கும் தாம் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், தமக்குத் தெரிந்த பணக்கார நண்பர்களையும், உறவினர்களையும் அணுகி ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால் எந்தப் பணக்காரரும் தாம் எப்படி பணக்காரரானோம் என்ற ரகசியத்தை வெளியில் சொல்வதில்லை.

எனவே, அவர்கள் அடுத்து நாடுவது ஆங்கிலப் புத்தகங்களை! பெரும்பாலான ஆங்கிலப் புத்தகங்கள் நல்ல வழிகளைக் காட்டினாலும்கூட, அவை நம் மண்ணுக்கும், நம் சூழலுக்கும், நம் சட்ட திட்டங்களுக்கும் பொருந்துவனவாக இருப்பதில்லை. இறுதியாக அவர்கள் தம் தாய்மொழியில் புத்தகங்களைத் தேடுகிறார்கள். தமிழில் தன்முனைப்பைத் தூண்டக்கூடிய புத்தகங்கள் ஏராளமாக இருந்தாலும்கூட, பணக்காரனாவதற்கான நடைமுறை ரகசியத்தை - உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கக் கூடிய முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.

About Ramkumar Singaram:

பத்திரிகையாளர் – எழுத்தாளர் – பேச்சாளர் - மக்கள் தொடர்பு ஆலோசகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் இவர்.

94.3 ரேடியோ ஒன் எஃப்.எம்.-ல் 1000 மணி நேரத்திக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். மக்கள் தொலைக்காட்சி, ஜெயா பிளஸ், கலைஞர் செய்திகள் பொதிகை உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட நேரலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவம் கொண்டவர்.

“செலவைக் குறைங்க சார்’, ‘தொழில் செய்ய விரும்பு’, ‘அசத்தல் தொழில்கள் 64’, ‘பணக்காரராக 10 ரகசியங்கள்’, ‘தொழிலாளி டூ முதலாளி’, ‘ஒரு கதை ஒரு விதை’, ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?’ ஆகிய ஏழு புத்தகங்களையும், ‘10 Zero Budget Marketing Ideas’ என்ற E-Book - ஐயும் எழுதியுள்ளார்.

தினத்தந்தி, தினமணி, குமுதம், குங்குமம், மங்கையர் மலர் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருபவர்.

தற்போது நாணயம் விகடன் வார இதழில் ‘சக்ஸஸ் பஃர்முலா’ என்ற தலைப்பில் தொடர்கட்டுரை எழுதிவருகிறார். மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில், வியாழன்தோறும் 8:15 முதல் 8:25 மணி வரை ‘கற்றலும் கற்பித்தலும்’ என்ற தலைப்பில் பேசி வருகிறார். இவரது பேச்சுக்கள் ‘சிகரம் தொட்ட மனிதர்கள்’ என்ற தலைப்பில் ஒரு Audio CD - யாகவும் வெளியாகியுள்ளது.

கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தமிழகத்தின் நம்பர் ஒன் செய்தி பரப்பும் நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளாக திறம்பட நடத்திவருகிறார்.

More books by Ramkumar Singaram

Neengal Innum Yen Kodeesvarar Agavillai?
Ramkumar Singaram
Thozhilaali to Mudhalaali
Ramkumar Singaram
Kodigalai Kottum Success Ragasiyangal!
Ramkumar Singaram
Oru Kathai... Oru Vidhai...!
Ramkumar Singaram
Thozhil Seyya Virumbu
Ramkumar Singaram

Books Similar to Panakkaararaaga 10 Ragasiyangal

View All
Neengadhaan Saavi
Surekaa
Psychic Wonders And Pathway To Success
S. Nagarajan
Sakthi Masala Business Vetri Kathai
Dr. Ramesh Prabha
Thiyanathaal Ulakai Vellungal
Udayadeepan
Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal
Udayadeepan