பணமா, பாசமா - காதல் கதைகளோடு வித்தியாசமான கதைகளை எழுதுவதற்கு அனுமதித்த என் பேனா, இம்முறை இந்த கதையை எழுதப் போகிறேன் என்று சொன்னதற்கு தயங்கியது. இக்கதையின் வீரியம் மன பாரத்தை சுமக்கும் எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும், அதோடு நடுத்தர வயதை கடந்து கொண்டிருக்கும் பலருக்கும் எச்சரிக்கை உணர்வை உணர்த்தும் என்று சொல்லி என் பேனாவிடம் அனுமதி பெற்றேன். இதயமுள்ள எவரையும் "நாளை நம் நிலை என்ன?" என்று இக்கதை யோசிக்க வைத்தால், அதுவே என் படைப்பின் நோக்கம் நிறைவேறிவிடும்.இக்கதையின் முடிவு உங்களை ஒரு நிமிடமாவது, கண்கலங்க வைத்தால் அது என் பேனாவிற்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியாக இருக்கும். உங்கள் விமர்சனங்களை எதிர் நோக்கி.
- காஞ்சி. பாலச்சந்திரன்.
இவரைப் பற்றி...
இவரது மூதாதையர்கள் வசித்த ஊர் மாமண்டும் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது காஞ்சியில் தான் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாமே காஞ்சிபுரம் தான். வங்கிப் பணியில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதை வேந்தர், சிறுகதை நன்மணி, சிறுகதை செம்மல், பாரதியார் விருது போன்றவை இவர் பெற்ற விருதுகளாகும்.
சிறுகதை எழுத்தாளர், நாவல் ஆசிரியர், நடிகர் என்ற பலவேறு கோணங்களில் இவருக்கு பரிச்சய முண்டு. சன் தொலைக்காட்சி, புதுவை தொலைக்காட்சி, சென்னை பொதிகை, விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக் காட்சிகளில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.
“இவன் தந்திரன்" என்ற படத்தில் நூலகராக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். "தீ பரவட்டும்" என்ற குறும்படத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.
இவரது நாவல்கள் கண்டிப்பாக வாசகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இவர் மேன்மேலும் தொடர்ந்து பல படைப்புக்களை எழுதி வாசக வாசகிகளின் பாராட்டுக்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
அவள் ஒரு பூந்தொட்டி, மனம் போன போக்கிலே, நிஜம் போன்ற பொய், பணமா பாசமா என்பவை உள்ளிட்ட பல நாவல்களும், வாரங்கள் வார்த்த நிலாக்கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்து, அரசு நூலகங்களில் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வார இதழ்களில் இவரது எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் வெளிவந்துள்ளன.
Rent Now Sangeetha
Nice story