சரித்திர உண்மைகள் என்னும் கசப்பு மருந்தை, சர்க்கரை பாகு என்கிற எனது கற்பனையில் தோய்த்து, வாசகர்களுக்கு தந்துள்ளேன். சிலருக்கு கசப்பு மருந்து பிடிக்கலாம், சர்க்கரை பாகு திகட்டலாம். மற்றவருக்கு, சர்க்கரை பாகு இனிக்கலாம். கசப்பு மருந்தை விழுங்க அவர்கள் சிரமப்படக்கூடும்.
அவரவர்கள் சுவை உணர்வை பொறுத்தது. இந்த நாவல் முழுவதுமே கற்பனை என்று கூறினால் பலரது ஒப்பற்ற தியாகங்கள் வீணாக போய்விடும். முழுவதும் உண்மை என்று கூறினாலும், சர்ச்சைக்கு இடமாகிவிடும்.
எனவே இதை கற்பனை என்று எண்ணியே படியுங்கள். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு பயணித்து, நான் கூறியவற்றில் எவை உண்மைகள் எவை கற்பனைகள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
- காலச்சக்கரம் நரசிம்மா
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.
காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை tanthehindu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்
Rent Now Subashini Ramanan
. Very interesting novel. It is one of his best novel too, I think. Like it very much
Subashini Ramanan
வணக்கம். Very interesting novel. It is one of his best novel too, I think. Like it very much