தென் பாண்டி நாடு, சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கிய பிரதேசம். சமயாச் சாரியார்கள் ஊரூராகச் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பிப் பண்பை வளர்த்த பகுதி.
சமய குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பாண்டித் தலங்கள் பதிநான்கினைப் பற்றிய வரலாறும், அவ்வத் தலங்களில் பாடப் பெற்ற பதிகங்களும், அத் தலங்களுக்குச் செல்வதற்குரிய மார்க்கம் முதலியனவும் இந்நூலில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.
தலயாத்திரை செய்ய விரும்புவோருக்கும், தல வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்புவோர்க்கும் மிகுதும் பயன்படும்.
உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
Free - Read Now Vinod
Not available for download
Rajarathinam
Super