"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனாலும், இளமை கடந்து காதின் ஓரம் நரைத்தாலும் காதலித்த காலமெல்லாம் கனவு போல ஆனாலும் உறவாக முடியாமல், உணர்வுகளில் மட்டுமே வாழ்ந்தாலும் ஆத்மாவில் உறைந்திருக்கும் காதல் காலம் கனியும் போது தானே கனிந்து வரும். வருடங்கள் பல கடந்த பின்னும். அப்படியான ஒரு காதல் கதை"
சித்ரா.ஜி 2015 வருடத்திலிருந்து எழுதி வருகின்றார். இதுவரை 27 நாவல்கள் எழுதியிருக்கின்றார். இவரது நாவல்கள் கண்மணி, பெண்மணி இதழ்களிலும், அறிவாலயம் பதிப்பகத்தின் வாயிலாக நேரடியாகவும் வெளிவருகின்றன.
கண்மணி, பெண்மணி இதழ்கள் நடத்திய நாவல் போட்டியிலும், அண்ணா நினைவுச் சிறுகதை போட்டியிலும் பரிசு பெற்றிருக்கின்றார்.
இவரது நாவல்கள் குடும்பம், காதல், சமூகச் சிந்தனை என மூன்று பகுதிகளை உள்ளடக்கியே எழுதப்பட்டு வருகின்றன.
Rent Now