"பட்டாம்பூச்சி பற பற" - நாம் அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களையும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் உள்ளடக்கிய எளியக் கதையே.
மாறி வரும் சமூகச் சூழலில் மனித உறவுகளிடையே ஏற்படும் சவால்களுக்கும், காலம் காலமாக அழுத்தமாக மனதில் ஊறிய பழமையான எண்ணங்களுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர் நடந்துக்கொண்டே இருக்கிறது. அந்த யுத்தத்தின் சில கோணங்களைக் கதையின் போக்கில் லேசாகத் தொட்டு செல்ல முயன்றுள்ளேன்.
மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் இக்கதை உங்கள் மனதிலும் நீங்காது இடம்பிடிக்கும் என நம்புகிறேன். வாசித்து மகிழுங்கள்.
அன்புடன்,
ஹேமா ஜெய்
ஹேமா ஜெய் - தன் இளம் வயதிலிருந்து தொடரும் வாசிப்பு சுவையின் ஈர்ப்பில் 2015 முதல் தமிழில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். திருமதி. லக்ஷ்மி, திருமதி. சிவசங்கரி ஆகிய மூத்த தலைமுறை எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொண்டுள்ள இவர் நவீன குடும்பங்களின் சிக்கல்களை, பெண்கள் மற்றும் முதியவர்களின் உளப் பிரச்சனைகளை மையக்கருவாகக் கொண்டு மென் வாசிப்பு ஆக்கங்களாக எழுத விருப்பம் கொண்டவர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நாவல்களையும், இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் மாத இதழ், பல்வேறு வலைப்பூக்கள், மின்னிதழ்களில் இவரது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன, பல படைப்புகள் முதல் பரிசு பெற்றுள்ளன.
ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான கருப்பொருட்களைத் தேடி எழுதும் இவரது ஆக்கங்கள் அச்சுப்புத்தகமாக வெளிவருவதுடன் மின் புத்தகமாகவும் கிடைக்கப் பெறுகின்றன. இவரது படைப்புகள் பற்றிய உங்கள் எண்ணங்களை, நிறை குறைகளை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துகளை அறிய ஹேமா ஆவலாக உள்ளார்.
Rent Now