‘டேக்ஓவர்’ தேவராஜ்..!
நலிவடைந்த சிறு கம்பெனிகள் பெரும்பாலானவற்றைத் தன் வசத்தில் கொண்டுவர நினைப்பதால், அவனுக்கு அப்படியொரு பட்டப்பெயர்.
நாயகி லதிகாவின் கம்பெனியும் அப்படியொரு நிலைக்கு வர, தன்னம்பிக்கை சிகரமான நம் நாயகி தன் கம்பெனியை அவனுக்கு விலைபேச மறுக்கிறாள். கம்பெனியை நீயே வைத்துக்கொள்... காதலால் உன்னை ஜெயிக்கிறேன் என்கிறான் நம் நாயகன்.
காதலில் தன்னை ‘டேக்ஓவர்’ செய்தவனை, லதிகா எவ்வாறு இதயத்தில் வைத்துக் கொண்டாடினாள்.
இவர்களின் காதலுக்கு நடுவே, தேவராஜின் சகோதரி தெய்வானையின் குளறுபடியான வாழ்க்கை.
விதிவசத்தால் எத்தனை முயன்றாலும், சில பெண்களின் வாழ்க்கை சரியாக அமைவதில்லை.
வாழ்க்கைத் துணையை விரட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் கணவன் மிகச் சுலபமாக மனைவி மீது பழியைப் போட்டுவிடும் பாழாய்ப்போன மனப்பாங்கு. இந்தக் கதையைப் படிக்கும்போது தேவா போல் ஒரு சகோதரன் கிடைக்கமாட்டானா என்ற ஏக்கம் வரலாம்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now