Infaa Alocious
நாயகன் : விக்ரம்.
நாயகி : ஆதிரா.
விக்ரம்... யாருமற்ற தனிமரமாய் வாழ்ந்து வருபவன்... அவனது வாழ்க்கைக்குள் அதிரடியாக நுழையும் ஆதிரா. தன் நேசத்தை தயக்கமே இன்றி அவனிடம் உரைக்க, தன் நிலையை எண்ணி அவள் நேசத்தை தவிர்க்கும் நாயகன்.
ஆனால், தன் நேசத்துக்காக விடாமல் போராடும் நாயகி. இவர்களின் காதலுக்கு தடையாக ஜாதி, மதம் என அனைத்தும் குறுக்கே நிற்க, தன் வாழ்க்கையின் ஒரே பிடிப்பான உறவை (ஆதிராவை) விட்டுக்கொடுக்கவே முடியாத நிலையில் தவிக்கும் விக்ரம்.
விக்ரமுக்கும் அவனது நண்பன் வருணுக்கும் இடையே இருக்கும் நட்பு. பெரும் தொழிலதிபனான வருணுக்கும், விக்ரமுக்குமான நட்பு எந்த புள்ளியில் துவங்கியது? அவர்களது நட்பு இவ்வளவு இறுக காரணமான இருந்த நிகழ்வுகள் என்ன? இவர்களின் நட்பை வருணின் மனைவி சரியாக புரிந்து கொண்டாளா?
விக்ரம் மற்றும் ஆதிராவின் திருமணம் நடந்ததா? எப்படி நடந்தது? அதற்கு காரணமானவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு விடையை இந்த கதைக்குள் தேடலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது.
இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.