Home / eBooks / Poonkothu
Poonkothu eBook Online

Poonkothu (பூங்கொத்து)

About Poonkothu :

புதுக்கவிதை இயக்கம், ஆங்கில இலக்கியத்தில், அமெரிக்கக் கவிஞன் 'வால்ட் விட்மன்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

அவர் எழுதிய புல்லின் இதழ்கள் (Leaves of grass) புதுக்கவிதை உலகப் புகழ் பெற்றது.

வால்ட் விட்மனைப் பின்பற்றி 'எஸ்ரா பவுண்டு' கட்டுப்பாடற்ற கவிதை (Verse Libre) இயக்கம் ஒன்றைப் பரப்பத் தொடங்கினார்.

இந்த இயக்கத்திற்காக 1912ல் மூன்று முக்கியக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

1. எழுதும் பொருளை நேர்முகமாக அணுகும் முறை.

2. கவிதையின் வெளிப்பாட்டிற்கு எந்த வகையிலும் பயன்படாத ஒரு சிறு சொல்லையும் சேர்க்காமல் இருத்தல்.

3. சொற்றொடர்களில் அமையும் இசை தழுவிய தொடர்ச்சி.

இந்த மூன்று கொள்கைகளும் கட்டுப்பாடற்ற கவிதை உருவாக்கத்தில் பின்பற்றப் பட வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டன! அதன்பின் புதுக்கவிதையியலில் வளர்ச்சி தோன்றியது.

சந்தம் கட்டிப் பாடிய பாரதியும் வசன கவிதையாக முதற்கிளை; இன்பம் என்று இனியவைகளைத் தொகுத்துக் கொடுத்தது கூட புதுக்கவிதையின் தோற்றுவாயாக அமைந்தது.

தளை, சீர், அணி, சந்தம், எதுகை, மோனை, உவமை எல்லாம் மறைந்து சொல்லாடல் மூலம் சொல்ல வந்ததை வாசிப்போர் மனதில் தைக்கும் வண்ணம் புனைவுகள் வரத் தொடங்கியுள்ளன.

சொல்லாடல்களைத் தொகுத்து ‘பூங்கொத்து' என்று தலைப்பிட்டு உங்கள் பார்வைக்கு விருந்தாகின்றன.

பலவிதமலர்களின் நறுமணம் பூங்கொத்தில் வருவதைப்போல வாசிப்போர் மனதில் பலவித எண்ணங்கள் நிச்சயம் முகிழ்க்கும்.

- கே.எஸ்.ரமணா

About K.S.Ramanaa :

இவர், முதுகலைப் பட்டம் பெற்று வழக்குறைஞராக உள்ளார். இவர் எழுதிய சமூக நோக்குள்ள நாடகங்கள் அகில இந்திய வானொலி நிலையம் - சென்னை, கோவை, திருச்சி ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதுவரை கதை, கவிதை, நாடகம், கட்டுரை என 14 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய 'சிறந்த நாடக விருது', பி.ஆர்.ஜி.நாகப்பன் ராஜம்மாள் அறக்கட்டளை வழங்கிய 'இலக்கியச் சுடர்' விருது, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கிய ‘பாவேந்தர் நெறிச்செம்மல் விருது' உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rent Now
Write A Review

Same Author Books