Home / eBooks / Praise Be To God
Praise Be To God eBook Online

Praise Be To God (போற்றிப் பஃறொடை வெண்பா)

About Praise Be To God :

இந்நூல் நெடிய பாடலாக விளங்குகின்றது என்றாலும் ஆங்காங்கே போற்றி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இப்போற்றி என்ற சொல் பயன்படுத்தப்படுகின்ற இடம் ஒரு படிநிலை ஆகும். ஒவ்வொரு போற்றியும் ஒவ்வொரு படிநிலையாகும். ஆன்மா இப்படி நிலைகளில் ஏறி சிவபோகத்தைப் பெறும் நிலையில் இந்நெடும்பாடல் புனையப் பெற்றுள்ளது.

உயிரின் பிறப்பு, அது உடல் எடுக்கும் திறம், அவ்வுடலின் வழியாக முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்து சிவபோக நிலையை அனுபவிக்கும் திறம் ஆகியன இதனுள் உணர்த்தப் பெறுகின்றன. குறிப்பாக மறைஞான சம்பந்தர் என்ற தன் ஆசாரியனை எந்நேரமும் போற்றித் தொழும் உமாபதி சிவாசாரியாரின் ஆசிரிய அனுபவத்தை இந்நூல் எடுத்துரைக்கின்றது.

மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் உயிரைத் துரியாதீதம் என்ற நிலை வரை அழைத்துச் சென்று முக்தி வழிப்படுத்தும் ஞான மார்க்கத்தை இந்நூல் அறிவிக்கின்றது. ஏகான்மவாதிகள், சிவசமயவாதிகள் ஆகியோரை இந்நூல் மறுத்துரைக்கின்றது.

சாதாரண சகல நிலை பெற்ற ஆன்மாவும் இறைவனை குருவின் வழியாக எளிமையாக அடைய முடியும் என்ற நம்பிக்கையை இப்போற்றி நூல் தருகின்றது. இது செய்நன்றி அறியும் நூல் ஆகும். சகலநிலையில் உள்ள ஆன்மாவை எவ்வித பிரதிபலனும் கருதாமல் முத்தி நிலை அடையச் செய்தமைக்காக போற்றி சொல்லி இந்நூல் வணங்குகின்றது. முத்தி நிலை என்ற பேரொளி நிலையை அடைய வழி காட்டிய குருவிற்குப் போற்றி செய்தலைத் தவிர வேறு எக்கைமாறும் செய்ய இயலாது.

About Dr. M.Palaniappan :

For the past thirteen years I have worked as a college professor. I've written more than ten books. I've written more than one hundred research articles in international level, National level and State level journals. I also attended so many seminars. My favorite subject areas are grammar, literature, Tamil computing, and devotional literature. I worked at RAJAH'S COLLEGE in Pudukkottai as a associate professor and RAJA DORAISINGAM GOVT ARTS COLLEGE in sivaganga and Goverment arts and science college, Thiruvadanai as a head of the department of Tamil. I was working as an assistant director in Tamil Virtual University at Chennai for two years. At that time I wrote the lessons and designed the web based lesson structure for the international students. I got research guide approval from Trichy Barathidasan University and karaikkudi alagappa university. I guided ten M.A students, fifty M.phil students, and five Ph.D Scholars. I published my articles in E Journals like thinnai, pathivukal, muthukamalam, and vallamai. So many my articles are used for Wikipedia references. I got so many awards and prizes for my literary works.

Rent Now
Write A Review

Same Author Books