என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.
வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.
உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.
என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்.
Rent Now கோபு
எழுத்துலக சாதனையாளர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் பற்றியும், அவர்களின் சில மின்னூல்கள் பற்றியும் மதிப்புரை செய்யப்பட்டு தனிப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிற்கான இணைப்புகள் இதோ: http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_23.html http://gopu1949.blogspot.in/2017/03/blog-post_30.html http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_21.html
GOPU
அன்னையர் தினத்தில் அப்பா ஆஹா. உண்ணாவிரதம் அரசியல் நையாண்டி அருமை. உறவுகள் மிகவும் யதார்த்தம். பெண்களின் பிரச்சனைகளைச் சொல்லும் ஒரு சொட்டுக் கண்ணீர், பெண்ணெனும் இயந்திரம், புதைக்கப்படும் உண்மைகள் படிப்போரை கண்கலங்கி சிந்திக்க வைப்பவை. மொத்தத்தில் மிக அருமையான நூல். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
கீதா மதிவாணன்
தனிமனித மற்றும் சமுதாயத்தின் அவலங்களைப் புட்டுப்புட்டு வைக்கும் கதைகளுக்கு சபாஷ்.. நல்ல நேர்த்தியான எழுத்தோட்டம் கதைகளை சலிப்பில்லாமல் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் எல்லாமே சிறப்பு என்றாலும் மிகவும் மனந்தொட்ட கதைகள் உறவுகள், ஒரு சொட்டுக் கண்ணீர் மற்றும் புதைக்கப்படும் உண்மைகள். பெண்மனத்தின் ஏக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கோடிட்டுக் காட்டும் அன்னையர் தினமும் பெண்ணெனும் இயந்திரமும் பிரமாதம். வாழ்த்துகள்.