Home / eBooks / Pudhiya Vergal
Pudhiya Vergal eBook Online

Pudhiya Vergal (புதிய வேர்கள்)

About G. Kalayarassy :

என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.

வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.

உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.

என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

Rent Now
Write A Review

Rating And Reviews

  கோபு

எழுத்துலக சாதனையாளர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் பற்றியும், அவர்களின் சில மின்னூல்கள் பற்றியும் மதிப்புரை செய்யப்பட்டு தனிப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிற்கான இணைப்புகள் இதோ: http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_21.html http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_23.html http://gopu1949.blogspot.in/2017/03/blog-post_30.html

  கோபு

இந்த மின்னூல் பற்றிய மதிப்புரை என் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_21.html

  கோபு

இந்த மின்னூல் பற்றிய மதிப்புரை என் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_21.html

  GOPU (2)

வெறுக்காமல் இருக்கும் பண்பினை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவைகள் ஆங்காங்கே மிக அழகாகச் சொல்லப் பட்டுள்ளன. நூல் முழுவதும் படித்ததும் ஓர் புன்னகையுடன் கூட மனதுக்கு முழுத் திருப்தியாக இருந்தது. இந்த நல்லதொரு மின்னூலை எனக்குப் பரிசாக அளித்து, படிக்க வாய்ப்பளித்த, நூலாசிரியருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  GOPU

’புதிய வேர்கள்’ என்ற தலைப்புத் தேர்வும், அதிலுள்ள குடும்பக்கதையும் வெகு அருமையாகவும் இனிமையாகவும் உள்ளது. நூலில் உள்ள அத்தனைக் கதைகளையும் படித்ததில், பலவும் நகைச்சுவையாக இருந்ததில் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பல கதைகளை இயல்பாகவும், யதார்த்தமாகவும் நூலாசிரியர் தன் சொந்த அனுபவங்களாலும், அக்கம் பக்கத்தாரின் வாழ்க்கையினைப் பார்த்தும் அனுபவித்து எழுதியுள்ளார்கள். கணவன் - மனைவிக்குள் இருக்க வேண்டிய அனுசரிப்புகள், மாமியார்-மருமகள் உறவுகள், என்றோ நடந்துவிட்டதோர் கசப்பான அனுபவங்களால் உறவுகளை

  கீதா மதிவாணன்

உறவுகளின் உரசல்களைப் பல பரிமாணங்களில் காட்டும் கதைகள் அருமை.. இத்தொகுப்பில் பல கதைகள் நகைச்சுவை விருந்து. நாய்க்கடி, ஒரு பல்லின் கதை, பெண் பார்க்கும் படலம் போன்ற கதைகள் ஆரம்பம் முதல் இறுதிவரை வாய்விட்டு சிரிக்கவைக்கின்றன. பெண் பார்க்கும் படலம் கதையில் பெண்ணுக்குத் தேவையான கலையைக் கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்று பெண்ணின் தந்தை குறிப்பிடும் கலை காலத்துக்கேற்ற கலை.. :)))

Same Author Books