Lakshmi Subramaniam
இந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வரும் தனது வாழ்நாளில் செய்ய வேண்டிய முக்கியமான கடமை, காசிக்குப் போய் 'கங்கா ஸ்நானம்' செய்து திரும்புவது.அப்படிச் செல்லும் போது, காசி, பிரயாகை, கயா ஆகிய மூன்று இடங்களிலும் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும்.இந்த அரும்பேறு எனக்குக் கிடைத்தது.என்னுடைய அனுபவங்களை, இவ்வாறு செல்ல நினைக்கும் அன்பர்களுக்குப் பயன்படக் கூடிய குறிப்புகளுடன், இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.