முகம் மாறிவரும் சமூகக் கோட்பாடுகள். பொருளாதார பலத்தால் மட்டுமே எடைபோடப்படுகின்ற வாழ்வியல் வெற்றிகள். வெற்றியால் மட்டுமே எடைபோடப்படுகின்ற மனிதம். திரைப்பட அரூப நாயகர்களுக்குத் தங்களை அடிமை செய்யும் இளைஞர்கள். முந்தைய தலைமுறையின் முறைமைகளைக் கிழித்துப் போடும் இளைய சமுதாயம். இல்லறத்தின் அர்த்தமென்ன? தம்பதிகளின் பிணைப்பு எதுவரை? பெண்ணுக்குத் துணை கணவனா? கல்வியா?- இப்படிப் பலவிதக் கேள்விகளைப் படம் போடுகிறது 'ரிஷியும் மனுஷியும்'.
-ஆண்டாள் பிரியதர்ஷினி
" />வாழ்க்கை சுவாரஸ்யமானது. சவாலானது. வாழ்க்கையைப் பதிவு பண்ணும் இலக்கியமும் அப்படித்தான். நழுவுகின்ற உணர்வுகளை வார்த்தைகள் மீதேற்றி, படைப்புச் சிற்பமாகச் செதுக்குவது படைப்பாளிக்குக் கிடைக்கும் சவால். அந்த அனுபவத்தைத் தராசின் நேர்கோட்டுச் சிந்தனையோடு நியாயமாய்ச் செயல்படுத்துகின்ற படைப்பாளியே காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறான்.
"மரபு சார்ந்த நம்பிக்கைகளோடு வளரும் நவீனகாலப் பெண்ணுக்கு ஏற்படும் உரசல்களைப் படம்போட்டுக் காட்டுவதாகவே இவரது கதைகள் பெரும்பாலும் இருந்திருக்கின்றன..." என்று எழுத்தாளர் மாலன் அவர்கள் 'குங்குமம்' பத்திரிக்கையில் எழுதியதை "ரிஷியும் மனுஷியும்" தொகுப்பு நியாயப்படுத்தினால் சந்தோஷம்.
முகம் மாறிவரும் சமூகக் கோட்பாடுகள். பொருளாதார பலத்தால் மட்டுமே எடைபோடப்படுகின்ற வாழ்வியல் வெற்றிகள். வெற்றியால் மட்டுமே எடைபோடப்படுகின்ற மனிதம். திரைப்பட அரூப நாயகர்களுக்குத் தங்களை அடிமை செய்யும் இளைஞர்கள். முந்தைய தலைமுறையின் முறைமைகளைக் கிழித்துப் போடும் இளைய சமுதாயம். இல்லறத்தின் அர்த்தமென்ன? தம்பதிகளின் பிணைப்பு எதுவரை? பெண்ணுக்குத் துணை கணவனா? கல்வியா?- இப்படிப் பலவிதக் கேள்விகளைப் படம் போடுகிறது 'ரிஷியும் மனுஷியும்'.
-ஆண்டாள் பிரியதர்ஷினி
இவர் - தாமிரபரணி தந்த இலக்கிய விளைச்சல். கவிதைப் பெண் என்பது இவரது முகம். நெல்லை மண் எல்லை கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என நேசிப்பவர். பெண்ணியவாதி நிலை கடந்து மனித நேயவாதி(Not feminist but humanist) என்னும் தளம் புகுந்து யோசிப்பவர்.
திரு மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ கமல் ஹாசன் மற்றும் பலர் வெளியிட்ட தொகுப்புகளோடு, கவிதை சிறுகதை புதினம், கட்டுரை, திரைப்பாடல்கள் என சிறகு விரிக்கும் பன்முகப் படைப்பாளி.
அவனின் திருமதி, தீ, தோஷம், பூஜை, கழிவு - முத்திரைச் சிறுகதைகளாக ஆனந்த விகடன் வைர விழாவில் பரிசு பெற்றவை.
உயரிய இலக்கிய விருதுகள் பெற்ற இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடமாகவும், ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்டப் பாதையாகவும் சிறக்கின்றன.
பல சாதனைகளுக்குப் பிறகும், தன் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார்.