R.M.V. - Oru Thondar

Ranimaindhan

0

0
eBook
Downloads5 Downloads
TamilTamil
NovelNovel
BiographyBiography
Page640 pages

About R.M.V. - Oru Thondar

‘ஏன் இந்த நூல்?’ - சிலர் கேள்வி எழுப்பக் கூடும். ஏன், நானேகூட அதைக் கேட்டுக் கொண்டதுண்டு. ஆனால், பல ஆண்டுகளாக என்னோடு பழகுகிறவர்கள், பலநேரங்களில் உரையாடுகிறவர்கள், அரசியல் இயக்கம் தொடர்பாகவும், திரையுலகம் பற்றியும் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், அது விவாதமாக மாறுகிற நேரத்தில் விவாதித்தவர்கள் பலரும் நான் சொல்லுகிற செய்திகளை, ஆதாரமாக எடுத்துக் காட்டுகிற நிகழ்ச்சிகளை, அதிலும் குறிப்பாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியவர்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுகிற நேரத்திலெல்லாம் - பலரும் ஒரே மாதிரியாக ‘இவற்றையெல்லாம் எப்படியாவது ஒரு நூலாகத் தொகுத்து விடுங்கள்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இதோ தொகுத்துவிட்டேன் உங்களுக்காக...

About Ranimaindhan:

கு. ராதாகிருஷ்ணன், 15.10.1944 ல் பிறந்தார். பி.காம்., சி.ஏ.ஐ.ஐ.பி., படித்துள்ளார். ராணிமைந்தன் எனும் புனை பெயரில் பல கதைகள் எழுதியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை கிளையில் அக்டோபர் 1965 முதல் மார்ச் 1997 வரை - 32 ஆண்டுகள் பனியாற்றினார். பின் லண்டன் பி.பி.சியின் தமிழ் வானொலிப் பிரிவான 'தமிழோசை சேவையில் சென்னை அலுவலகத்தில் நேயர் நல்லுறவு அதிகாரியாக ஏப்ரல் 1997 முதல் அக்டோபர் 2004 வரை - 7 ஆண்டுகள் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகி வரும் 'தமிழ் முழக்கம் பண்பலை வானொலிக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையிலிருந்து வாரம் தோறும் செய்தி வாசித்துள்ளார்.

அமெரிக்கா, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்ரீலங்கா, ஆகிய வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.

திரு. சாவி அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'தினமணி கதிர்', 'குங்குமம்', 'சாவி' இதழ்களில் 1975 முதல் 2000 வரை மூவாயிரத்திற்கு மேற்பட்ட பேட்டிக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் - தினமணி கதிரில் வாரந்தோறும் அக்கரைச் சீமை என்ற தலைப்பில் உலக நடப்புகள் பற்றிய தகவல் தொகுப்பை 180 வாரங்களுக்கு எழுதியுள்ளார்.

சாவி அவர்களின் மறைவிற்குப் பிறகு வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஈடுபாடு பல்துறை பெருமக்களின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருது (2002), சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'தமிழ் வாகைச் செம்மல் விருது (2003), ஃபிரான்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'நூல் வேந்தர் விருது (2006), அகில இந்திய சமூக நல அமைப்பு, புதுச்சேரி வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2009), அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களின் 85ஆம் பிறந்த நாள் மங்கல விழாவில் சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய சான்றோர் விருது (2010), தமிழக அரசின் 'கலைமாமணி' விருது (2011), சென்னை தேவன் அறக்கட்டளை வழங்கிய தேவன் நினைவுப் பதக்கம் (2011), சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்குரிய சேக்கிழார் விருது (2016), 'ராம்கோ ராஜா' - நன்னெறி வாழ்க்கை நூல் 2017ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இலக்கிய சிந்தனை அமைப்பு வழங்கிய பாராட்டு (2018), சென்னை கம்பன் கழகம் வழங்கிய திருமதி சி.எம்.பிரேமகுமாரி ,நினைவுப்பரிசு (2018) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

More books by Ranimaindhan

View All
Musthafa
Ranimaindhan
Malaichamy IAS (Retd)
Ranimaindhan
Elumboodu Oru Vazhkai
Ranimaindhan
Adayaril Innoru Aalamaram
Ranimaindhan
Oru Neethiyarasarin Nedum Payanam
Ranimaindhan

Books Similar to R.M.V. - Oru Thondar

View All
Vijayalakshmi Pandit
Vallikannan
Sathanai Semmal Sa.Ve.Su.
M. Kamalavelan
W.P.A Soundrapandian
Kulashekar T
Anubavam Pazhamai
Vimala Ramani
Suriya Vamsam - Part 2
Sivasankari