Home / eBooks / Saadhi Rathathil Oduhirathu
Saadhi Rathathil Oduhirathu eBook Online

Saadhi Rathathil Oduhirathu (சாதி ரத்தத்தில் ஓடுகிறது)

About Saadhi Rathathil Oduhirathu :

"சாதி இரத்தத்தில் ஓடுகிறது" என்ற இந்தக் கதை 'சுதேசமித்திரன்' நாளிதழில் 'கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள்' என்று திரு. மேதாவியவர்களால் எனது மனமொப்பிய சம்மதமின்றி - அல்லது முழுமனத்துடன் அல்லாத சம்மதத்துடன் - மாற்றப்பட்ட தலைப்பின்கீழ் 1975 பிப்ரவரியில் தொடங்கி வெளிவந்தது. 'சாதி இரத்தத்தில் ஓடுகிறது' என்று சொன்னதன் வாயிலாக, சாதி என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கிறது - இருந்தே தீர வேண்டும் - அது இரத்தத்தில் ஓடவும் செய்கிறது, சாதிகள் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை, அந்தக் காரணம் பற்றி அதை வெளியிட்ட சுதேசமித்திரனும் கூடச் சாதிகளில் நம்பிக்கை கொண்டுள்ளது என்றெல்லாம் அந்தத் தலைப்பு தன்னைப் பார்த்தவர்களை நினைக்க வைக்கும் என்பதால் அதை மாற்றியாக வேண்டிய இன்றியமையாமையை அவர் சிறிது நேரம் வாதித்தார். கதையின் தலைப்புத் தர்க்கத்திற்குரியதாக இருப்பினும் கதையைப் படித்து முடித்ததன் பின்னர் - சாதிகள் பற்றிய என் கருத்துகளை நன்கு அறிந்துள்ள பல வாசகர்கள் அதைப் படிக்காமலேயுங்கூட - அப்படியெல்லாம் என்னைப் பற்றியோ சுதேசமித்திரனைப் பற்றியோ தவறாக நினைக்கவே மாட்டார்கள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அன்னார் செவிமடுத்தாரில்லை. எனவே அவர் தாமே மிகவும் சிந்தித்து, "கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள்" என்கிற தலைப்பை அதற்ககுச் சூட்டினார். அதுவும் கதைக்குப் பொருத்தமான தலைப்பாகவே இருப்பினும், நான் வைத்திருந்த தலைப்பே எனக்குப் பிடித்திருந்தமையால் அதையே புத்தகமாக வெளிவரும் அந்தக் கதைக்கு இப்போது சூட்டியுள்ளேன். நாகரிகமும் மனிதப் பண்பும் உடைய மனிதர்கள் சாதிப்பிவுகளிலோ அவற்றின் அவசியத்திலோ நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இன்றையச் சூழ்நிலையில் மனித இனத்தை இரண்டு வகைகளில்தான் சாதிப்பிரிவு செய்ய முடியும். ஏழை-பணக்காரன் அல்லது ஆண்-பெண் ஆகிய இருவிதங்களில்தான்! ஆயினும், பரந்த மனப்போக்கும், விட்டுக் கொடுக்கும் தன்மையும், சுயசாதிப்பற்றின்மையும், புரிந்துணர்வும் இல்லாதவர்கள் - ஒத்தசாதித் திருமணத்துக்கே தகுதியற்றவர்கள் என்பது ஒருபுறமிருக்க - கலப்பு மணத்துக்குக் கண்டிப்பாகச் சிறிதிம் தகுதி இல்லாதவர்கள் என்பதையும் அவர்கள் செய்து கொள்ளுகின்ற கலப்புத் திருமணம் எவ்வாறு தோல்வியில் முடிகிறது என்பதையும் - தோல்வியில் முடியாவிடினும் கூட எத்தகைய மோசமான விளைவுகளுக்கு அது அடிகோலுகின்றது என்பதையும் - இந்தக் கதையில் விளக்கியிருக்கிறேன். இதனால் நான் கல்ப்புத் திருமணத்துக்கு எதிரானவள் என்று ஒருபோதும் ஆகாது. 'கலப்பு நான் மணங்களால் காலப் போக்கில் சாதிகள் அழிந்து விடும்' என்பது கவர்ச்சி நிறைந்த வாதமாகவும், பேச்சளவில் ஒப்புக்கொள்ளத் தக்கதாகவும் இருப்பினும், சுயசாதிப்பற்றுக் கொண்டவர்கள் - இவர்கள் பெரும்பாலோர் என்பதையும், சாதி உணர்ச்சிகளை வென்றவர்கள் மிகச்சிலரென்பதையும், காலமாறுபாட்டுக்கு ஒப்பந்தம் கருத்துக்களை வாயளவில் மட்டுமே இவரகள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர் எனபதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது - செய்துகொள்ளுகிற கலப்பு மணங்களால் இன்னுமொரு புதிய சாதியே தோன்றி வருவதாகவே தெரிகிறது. சுருக்கமாய்க் கூறின், கணவன்மார் சாதிக்கு மனைவிமார் தங்களை - விரும்பியோ விரும்பாமலோ - மாற்றிக் கொண்டாக வேண்டிய வெட்கக்கேடே இந்தக் கலப்புமணத்தால் நிகழ்ந்து வருகிறது. ஆணின் சாதிக்குப் பெண்ணையும் அவள் பெறுகிற குழந்தைகளையும் மாற்றும் இந்தக் கலப்பு மணங்கள் சாதிகளை ஒழித்துக்கட்ட எந்த வகையில் துணை செய்கின்றன? இதில் சாதி ஒழிப்பு எங்கே ஜயா இருக்கிறது? இந்தக் கதையையும், சாதிப்பற்றும் மதப்பற்றும் கொண்ட குறுகிய மனத்தினர் - இவர்களே பெரும்பாலோர் என்பதைத் திரும்பவும் கவனிக்க - செய்துகொள்ளுகிற கலப்புமணத்தால் ஏற்படுகிற தீமைகளையும், குறிப்பாகப் பெண்கள் படுகின்ற இடர்களையும் விளக்கிக் கலைமகளில் நான் எழுதிய கட்டுரையையும் படித்துவிட்டு என்னைக் குறுகிய சாதிப்பற்றுடன் தொடர்பு படுத்திய சிலரை நான் அறிவேன். அது அவர்களின் புரிந்துகொள்ளாத் தன்மையை காட்டுகிறது. எனினும் என் எழுத்துகள் எல்லாவற்றையும் படித்துள்ளவர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதை அறிவேன். ஏனெனில் ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது முதற் குறுநாவலே 'மனமொத்த காதலுக்குச் சாதிவேறுபாடு தடையாக இருந்தல் கூடாது' என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. 'அரியும் சிவனும் ஒண்ணு' என்கிற இந்தக் கதையை நினைவு கூர்ந்தால், யாரும் இந்தக் கதையில் நான் என்ன சொல்லிருக்கிறேன் என்பதைத் தவறாகப் புரிந்துகொள்ளவே மாட்டார்கள் என்கிற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. --ஜோதிர்லதா கிரிஜா

About Jyothirllata Girija :

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.

Rent Now
Write A Review

Same Author Books