என் எழுத்துக்களின் ஆரம்பம் ஆங்கிலத்தில் என்றாலும், தமிழ்ப் பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் வரத் துவங்கிய பொழுது மனதில் எழுந்த மகிழ்ச்சியை விவரிக்க இயலாது.
என்னை எழுத்துலகிற்கு எடுத்துக்காட்டிய தினமணி ஞாயிறுமணியை மறக்க இயலாது. அது போன்றே பல பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றிகள்.
லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாராகவன் அவர்கள் எனக்கு பத்திரிகைகளுக்கு எழுதும் முறை, பேட்டிகள் எடுக்கும் விதம், பெண்களை முன்னேற்றுபடியாக எழுதும் எழுத்துக்கள் என்று அவர் அளித்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
பல பெண்களை சந்தித்துப் பேச சந்தர்ப்பம், அதனால் விரியும் நம் பார்வை, அந்தப் பார்வை மூலமாக நான் எழுதிய கட்டுரைகள் என்று என் உலகம் விரிந்தது.
இவற்றை புத்தகமாக வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஊக்குவித்த திரு. தீபம் எஸ். திருமலை அவர்களுக்கு நன்றி.
சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Rent Now