முறைப்பெண், முறைமாமன் என்று சொந்தபந்தத்தில் திருமணம் செய்யும் வழக்கம், முற்றிலும் ஒழிந்துவிடவில்லை.
முறைமாமன் சூர்யகுமாரை மணந்து கொள்கிறேன் என்று வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் உத்தரவாதம் அளிக்கிறாள் நாயகி சக்ரவர்ஷினி.
அவனும் சக்ராவை நினைத்துக் கனவு காணும் வேளையில், மேற்படிப்பு முடித்து வந்தவள், வேறுவகையில் முடிவெடுக்க, அவள் போடும் நிபந்தனைகளை ஏற்கமுடியாமல் திணறுகிறான் சூர்யகுமார்.
இருவரின் பிடிவாதமும் சற்றும் தளராத நிலையில், சக்ராவின் நிறுவனத்தில் வேலை செய்யும் அர்ஜுன் என்பவன் அவள் வாழ்க்கைக்குள் நுழைகிறான். அர்ஜுன் வந்தபிறகு சக்ராவின் வாழ்க்கை என்னவானது? சூர்யகுமாரின் நிலை என்ன?
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now