R. Manimala
சம்சாரம் என்பது வீணை! தன் மனைவியுடன் வாழ முடியாமல் தவிக்கும் பரந்தாமன். ஆனால் அவர் மனைவி, கோகுல் என்பவருடன் வாழ்ந்து வருகிறாள். யார் அந்த கோகுல்? இவர்கள் வாழ்வில் நடந்த திருப்பங்கள் என்ன? வாசிக்கலாம் மணிமாலாவின் விறுவிறுப்பான நடையில்...
சென்னையைச் சேர்ந்த ஆர்.மணிமாலா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கியவர். இதுவரை 175 நாவல்கள், 145 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. எம்.ஏ. படித்திருக்கிறார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவருடைய கதையில் வெளிவந்த திரைப்படம் ‘அமுதே’. தொலைக்காட்சி தொடர்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. ‘கண்மணி’ முதன்முதலாக நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றவர்.