வழக்கம் போல காதல்+குடும்பக் கதை என்றாலும்.. இக்கதை சற்றே வித்தியாசமானது.
காதல் இல்லாமல் வாழ்க்கையில்லையென்றாலும், அதுவே வாழ்வாதாரம் இல்லையே? காதலைத் தவிர எத்தனையோ வேலைகள் நமக்காக காத்திருக்கும்போது, அதன் முக்கியத்துவத்தையும் உணர வேண்டுமல்லவா? இக்கதை சமுதாய விழிப்புணர்ச்சியை முன்னிறுத்தி படைக்கப்பட்ட ஒன்று.
சமுதாய நோக்குடன் பொறுப்பான நாயகன். விவசாயத்தைத் தன் வாழ்வாதாரமாக நினைக்கும் பசமைப்புரட்சி ஆதரவாளன்..
‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’.. என்று திரியும் நாயகி.. ‘என்ன செய்கிறோம், ஏன், எதற்காக என்று எதையும் ஆராய்ந்து பார்க்காமல் எல்லோரும் காதலிக்கிறார்களே, நாமும் அதை செய்யலாமே’ என்ற மனப்போக்கு..
இவர்கள் செல்லும் பாதைதான் என்ன?.. வாழ்க்கை இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது..
கதையின் போக்கில் அறிந்து கொள்ள வாருங்கள் தோழமைகளே..
ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.
சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.
இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்
எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.
Rent Now