அந்தக்காலம் மாதிரியெல்லாம் இல்லை. இப்போ காலம் ரொம்ப கெட்டுப்போச்சு தம்பி என்பவரின் எளிய வார்த்தைகளை குறுக்கே வெட்டினால் ஒரு நவீன கவிதை கிடைக்கிறது. அது முன் பின் தெரியாத நவீன கவிதையாகக்கூட நடிக்கிறது. என்னே, எளிமையின் உன்னதம். அந்தகாலம் மலையேறிப்போனதென்ற சொலவடையைப் போல. ஆகவே நண்பர்களே, எளிமையைப் பருகுதல் கவிதையின் விதை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 1987ம் வருடம் பிறந்தவர். தந்தை, சி.செல்லத்துரை. தாய், சோ.மேகலா. பொறியியல் பட்டதாரியான இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
கவிதைப்பரப்பில் சில ஆண்டுகளாக இயங்கி வரும் இவரின் கவிதைகள் சமீபத்திய ஆண்டுகளில் ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளிவந்து பெரும் வாசக கவனத்தை ஈர்த்தன. மேலும் சினிமாவின் போக்கு, திரைக்கதை மற்றும் தமிழ் சினிமா பாடல்கள் குறித்து தொடர்ந்து உரையாடியும், இயங்கியும் வருபவர்.
இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
Rent Now