Home / eBooks / Shirdi Baba
Shirdi Baba eBook Online

Shirdi Baba (ஷிர்டி பாபா)

About Shirdi Baba :

மதங்கடந்த ஆன்மிகத்தை வலியுறுத்தியவர்கள் ஸ்ரீஅரவிந்தரும் ஸ்ரீ அன்னையும். ஷிர்டி பாபாவும் மதங்கடந்து எல்லா மக்களையும் கவர்ந்த ஒரு மகான். இந்து முஸ்லீம் ஒற்றுமை பாரதத்தில் மிக அதிகமாகத் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில், ஷிர்டி பாபாவின் வரலாறு இறையன்பர்கள் படிப்பதற்கும் பாராயணம் செய்வதற்கும் ஏற்றது. நதிகள் அனைத்தும் கடலில் கலக்கிற மாதிரி, எல்லா மதங்களும் பரம்பொருள் என்ற சமுத்திரத்தில்தான் கலக்கின்றன என்ற பரமஹம்சர் வாசகத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நூலைப் பயில்பவர்கள் இம்மைப் பயன்கள், மறுமைப் பயன்கள் இரண்டையும் பெறவும், மதங்களில் எல்லாம் உயர்ந்த மதம் அன்புதான் என்ற உண்மையை உணரவும், எல்லோர் மனத்திலும் சாந்தியும் சமாதானமும் நல்லிணக்கமும் நிலவவும் ஷிர்டி பாபாவின் அருள் துணைநிற்கட்டும்.

About Dr. Thiruppur Krishnan :

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தவர்.

தினமணியில் கால் நூற்றாண்டு காலம் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.

அம்பலம், சென்னை ஆன்லைன் ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அகில இந்திய வானொலி நடத்திய தேசிய ஒருமைப்பாட்டுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு, இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை முதல் பரிசு, ஆனந்த விகடன் வழங்கிய சிறுகதைக்கான முத்திரைப் பரிசுகள் உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றவர்.

ஹரிவம்சராய் பச்சன் பெயரிலான அகில இந்திய ஆசீர்வாத் விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இதழியல் வல்லுநர் விருது, செங்கமலத் தாயார் அறக்கட்டளை விருது, சுகி சுப்பிரமணியம் நூற்றாண்டு விருது, டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் விருது, சென்னை கம்பன் கழகம் மூலம் நிறுவப்பட்டுள்ள எழுத்தாளர் சிவசங்கரி படைப்பிலக்கிய விருது, ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய 'சான்றோர்' விருது, பாரதியார் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

இதழ் இலக்கிய ஏந்தல், தமிழ் ஞான வாரிதி, தமிழ்ச் செல்வம், தெய்வத் தமிழ் மாமணி, தமிழ் நிதி உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றவர்.

இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர். தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் நிகழ்ச்சிகள் வழங்குபவர்.

திரு ஏ.வி.எஸ். ராஜா அவர்களைப் பதிப்பாளராகக் கொண்டு ஸ்ரீராம் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்படும் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர்.

Rent Now
Write A Review

Same Author Books