மனிதன் என்றென்றும் வாழ்வில் உயர்வதற்காக கடின உழைப்பு மிக அவசியமாகவே இருக்கிறது.
காலத்தை உணர்ந்தும் கனவுகளை வளர்த்தும் சமுதாய முன்னேற்றத்திற்கு நாம் தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கிட தன்னம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
மனித வாழ்வில் குறை காண விரும்பாமல் நிறை காண விரும்பியே எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றியை காண்பதற்கான வழிமுறை கையாண்டு வளமோடும் நலமோடும் நிகழ்கால உணர்வுகள் உத்வேகம் கொண்டு உன்னத பணிகளை செவ்வனே செய்து முடித்திட வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு எழுதப்பட்டதே இந்நூலாகும்.
அன்புடன், மு.ப.நடராசன்.
மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
Rent Now