மனித வாழ்க்கையில் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு அடித்தளமாய் அமைவது கல்வி. அறியா மை நோய் தீர்க்கும் அருமருந்தாம் கல்வியின் அருமை பெருமைகளை கவிஞர். பொன். கருப்பையா இந்நூலில் நிறையவே பாடல் பொருளாக்கித் தந்துள்ளார்.
மனிதகுலம் பெருமை கொள்ள மடமை நீங்கியாகணும்.
மண்ணில் மைந்தர் அனைவருக்கும் எழுத்தறிவு சேரணும் என்ற பாடல்வரிகள் அனைவரும் கல்விபெறவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
கல்வியின் சிறப்பு, பெண் கல்வியின் மேன்மை என்பதோடு, வயதுவந்தோர் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேமிப்பின் அவசியம், ஒருமைப்பாட்டு உணர்வு, மனித நேயம் என்ற பல்வேறு கருத்துப் பொதிகள் இப்பாடல் நூலில் பொதிந்துகிடக்கின்றன.
படிக்கும் போதே பரவசப்படுத்தும் இப்பாடல்கள் இசைகூட்டிப் பாடப்படும் போது பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. சிந்தனைக்குரிய பாடல்களை இயற்றுவதோடு செவிக்கு இனிமையாகப்பாடும் ஆற்றல் மிக்க இந்நூலாசிரியரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
வாழ்த்துகளுடன், வீ. ராஜேஸ்வரி
முதன்மைக்கல்வி அலுவலர்மிக சிறந்த தமிழாசிரியாரக 36 ஆண்டுகள் பணி புரிந்த இவர், பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர். இவரின் எண்னிலடங்கா ஈடுபாடுகள் - எழுத்தாளர், நாடக இயக்குநர். பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர், இசையமைப்பாளர், பாடகர், ஒப்பனையாளர், இலக்கிய ஆர்வலர், சமூக சேவையாளர், ஊர்க்காவல்படைப்பிரிவு தளபதி என நீண்ட பட்டியல் கொண்டது. இவர், 72 சிறு, குறு நாடகங்கள், 450 இசைப்பாடல்கள், 7 தலைப்புகளில் வில்லுப்பாட்டு, பொதுஅறிவு, இலக்கிய நாடகங்கள் என பல படைப்புகளைப் படைத்துள்ளார். தமிழக நல்லாசிரியர் விருது, பல்துறைக் கலைஞர் விருது, ஆசிரிய மாமணி விருது, நாடகக் கலைமணி விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Rent Now