Home / eBooks / Siragai Viri!!... Sigaram Thodu!!
Siragai Viri!!... Sigaram Thodu!! eBook Online

Siragai Viri!!... Sigaram Thodu!! (சிறகை விரி!!... சிகரம் தொடு!!)

About Siragai Viri!!... Sigaram Thodu!! :

சைக்கிள் கடை வைத்து, பிழைப்பு நடத்தும் முருகன். தன் குல தெய்வ கோவிலின் கட்டிட நிதிக்காக உண்டியலில் பணம் சேர்க்கிறான். பணத் தட்டுப்பாட்டில் சிரமப்படும் போதெல்லாம், அதிலிருந்து எடுத்து செலவு செய்யலாம், என்கிறாள் அவன் மனைவி. ஆனால், எக்காரணத்தைக் கொண்டு சாமி காசை எடுக்கக் கூடாது, என்று பிடிவாதமாயிருக்கிறான் முருகன். குழந்தையின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப் பட்ட போதும், தன் உறுதியில் கான்கிரீட்டாய் நிற்கிறான்.

ஒரு நாள், அவன் வீட்டு முன்னால் யாரோவொரு கிழவி, பசியால் மயங்கி விழ, அவளுக்கு உணவளிக்க நினைக்கிறான். ஏற்கனவே வறுமை வாட்டிக் கொண்டிருந்ததால் அவன் வீட்டில் எதுவும் இல்லாது போகிறது. மற்ற வீடுகளில் முயற்சித்தும் கிடைக்காது போக, அந்த சாமி உண்டியலை உடைக்கிறான். அந்தக் கிழவிக்கு உணவளிக்கிறான். அவள் தன் பிள்ளையால் ஒதுக்கப்பட்ட கதையைச் சொல்ல, அவளைத் தன் வீட்டிலேயே வைத்துப் பாதுகாக்கிறான்.

சில மாதங்களுக்குப் பிறகு, கிழவியின் மகன் வந்து அவளைத் தன்னுடன் அனுப்பி விடுமாறு கேட்கிறான். கிழவி போக மாட்டாள், என்கிற நம்பிக்கையில், “அம்மா வந்தால் கூட்டிட்டுப் போ”என்கிறான் முருகன். ஆனால், அவன் நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு, கிழவி மகனுடன் புறப்பட்டுச் செல்கிறாள்.

ஆடிப் போகின்றனர் முருகன் குடும்பத்தார். தொடர்ந்து வ்ரும் நிகழ்வுகளைப் படிக்கும் எல்லா வாசக்ர்களும் நிச்சயம் மெய் சிலிர்த்துப் போவர். நீங்களும் வாசியுங்கள்.

About Mukil Dinakaran :

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books