Home / eBooks / Sol Aazhi Vensange!
Sol Aazhi Vensange! eBook Online

Sol Aazhi Vensange! (சொல் ஆழி வெண்சங்கே!)

About Sol Aazhi Vensange! :

ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பஞ்சாயுதத்தில் ஒன்றான தெய்வீகத்தன்மையுடைய 'பாஞ்சஜன்யம்' போற்றுவதற்குரியது. பாஞ்சஜன்ய சங்கின் மகத்துவதைப் பல புராணங்களும், சாஸ்திரங்களும் போற்றி புகழ்ந்துள்ளன.

இன்றைய நாகரீக உலகில், வாழ்வியல் வழிமுறைகளில் மிகச் சிறந்த வளர்ச்சியைக் கண்டிரிருக்கும் இக்காலகட்டத்தில், மகத்தான நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அப் 'பாஞ்சஜன்யம்' சங்கு நம்மில் ஒருவருக்கு கிடைத்த போது... அப்பாஞ்சஜன்யமும், அதைத் தொடர்ந்து அவரின் வாழ்க்கைப் பாதையும்... எதை நோக்கி பயணிக்கும்?

'மதம் என்பது மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது.'

இதைத்தான் 'சொல் ஆழி வெண்சங்கே' கதை சொல்ல வருகிறது.

இது எங்களின் (ஸ்ரீலஷ்மி சகோதரிகள்) புதுமுயற்சி என்று கூட சொல்லலாம்.

ஆன்மிகத்தோடு, இக்காலத்திற்பே பாஞ்சஜன்யமும் கதைக்கேற்ப பயணிக்கிறது. அன்றும், இன்றுமாய்… சுதந்திர இந்தியாவிற்கு முன்னும், பின்னும் என்று பாஞ்சஜன்யமும் பரிமளிக்கிறது.

About Srilakshmi :

ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.

சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.

இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்

எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.

Rent Now
Write A Review